தியானம் (மாசி 09, 2024)
வழியோரம் விழுந்த விதைகள்
சங்கீதம் 139:23
தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த முதலாளியொருவன், தன் பிழைப்புக்காக சத்திரமொன்றை நடத்தி வந்தான். அந்த ஊரைக் கடந்து பட்டணத்திற்கு போகின்றவர்களும், பட்டணத்திலிருந்து திரும்புகின்றவர்களும் தங்கி செல்வதற்கு அது வசதியான இடத்திலே அமைந்திருந்தது. நாளடை விலே, அந்த சத்திரத்திலே, குடித்து வெறித்து பலவிதமான களியாட்ட ங்களிலே ஈடுபடுகின்றவர்களும், சட்டவிரோதமாக வியாபார செய ல்களை நடப்பிக்கின்றவர்களும், கள்வர்களும் அந்த சத்திரத்தில் தங்கி வந்ததை அந்த ஊரின் ஜனங்கள் அவதானித் தார்கள். அந்த முதலாளியின் நண்பனொ ருவன், அவனை நோக்கி: நண் பனே, முன்புபோல அல்ல, இப் போது உன் சத்திரமானது பலவிதமான சட்ட விரோதமான தீய செயல்க ளை நடப்பிப்பதற்கான மையஸ்தானமாக இருப்பதையும், இது உன் பிள்ளைகளுக்கும், சமுதாயத்திலே வாழும் இளய தலைமுறைக்கும் பல பாதிப்புக்களை கொண்டு வரும் என்பதையும் நீ அறியாதிருக்கின் றாயா என்று கேட்டான். அதற்கு முதலாளியானவன்: இங்கே பார்! அவ ர்கள் என் வாடிக்கையாளர்கள். என் வியாபாரத்திற்கு அவர்கள் மிகை யான இலாபத்தை கொண்டு வருகின்றார்கள். அவர்கள் கெட்டழிந்தால் அது அவர்களுடையபாடு. சட்டவிரோதமான செயல்களை பார்ப்பதிற்கு நான் அவர்களுடைய அதிகாரியல்ல என்று தன்னுடைய நிலையை நியா யப்படுத்திக் கொண்டான். அந்த மனிதனானவனுடைய சத்திரத்தைப் போல சில மனிதர்களுடைய இல்லமும் உள்ளமும் காணப்படுகின்றது. எப்படிப்பட்ட மனிதர்களோ, எத்தகைய சிந்தனைகளோ, உள்ளே வந்து போவதற்கு, அவர்கள் இல்லத்திலோ, உள்ளத்திலோ வரையறை போடும் எல்லையோ காவலோ இல்லை. அதனால் அவர்கள் இருதயம் உணர்வற்று போய்விடுகின்றது. அதாவது, இப்படிப்பட்டவர்களின் இரு தயமானது வழியோரத்திற்கு ஒத்திருக்கின்றது. வழியோரத்திலே விழுந்த விதைகளை பறவைகள் விரைந்து பட்சித்துப்போடுவதுபோல, உணர்வற்று வாழும்இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பொல்லாங்கன் பறித்துக்கொள்ளுகிறான்;. பிரியமானவர்களே, உங்கள் இருதயம் எந்த நிலையிலுள்ளது? நீங்கள் வேத வார்த்தைகளை கேட் கும் போது, அவை உங்கள் இருதயத்தில் நல்ல மாற்றங்களை உண்டு பண்ணுகின்றதா? உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக வேண்டும் என்ற உணர்வு பெருகுகின்றதா? அப்படியில்லாதிருந்தால் உங்களை நீங்களே ஆராய்ந்து பார்த்து உங்கள் வழிகளை செம்மைப்படுத்துங்கள்.
ஜெபம்:
வார்த்தையை அனுப்பி குணமாக்குகின்ற தேவனே, உம்முடைய வார்த்தையை நான் கேட்கும் போது, அதன் மேன்மையை உணர்ந்து அதை என் வாழ்வில் கைக்கொள்ள உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 119:34