தியானம் (மாசி 07, 2024)
மனக்கடினமுள்ளவர்கள் யார்?
எபிரெயர் 3:15
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்தது போல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிரு க்கிறதே.
ஒரு விவசாயியானவன், தன் ஊரிலுள்ள ஒரு நிலத்தை வாங்கியிருந்தான். அவன் வியாபார அலுவலாக சில நாட்கள், பட்டணத்திற்கு செல்வ வேண்டியதாக இருந்தது. அந்த நாட்கள் நிலத்தை உழுது, விதைக்கின்ற காலமாக இருந்தபடியால் தன் மகனானவனை அழைத்து, அவனை நோக்கி: மகனே, அந்தப் புதிய நிலத்தை நன்றாக உழுது, பண்படுத்தி, விதைகளை குறித்த நாளிலே விதைக்க வேண்டும் என்று கூறி, பட்டணத்தி ற்கு சென்றார். குறித்த நாட்களுக்கு பின், அவர் மறுபடியும் தன் ஊருக்கு வரும் போது, விதைக்கப் பட்ட விதைகள், முளைவிட்டிருந்ததால், புதிய வயலானது பச்சைபசேல் என்று காட்சியளித்தது. அதைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார்;. ஆனால் சில நாட்களுக்கு பின்பு, வெய்யில் சற்று கடுமையாக இருந்த போது, வயலின் சில பகுதிகளிலே நன்றாக முளைத்து வந்த கன்றுகள் யாவும் காய்ந்து போகத் தொடங்கியது. அதை கண்ட விவசாயியானவன், புதிய வயலுக்கு சென்று, அந்த மண்ணின் தன் மையை ஆராய்ந்து பார்த்த போது, அந்த பகுதியிலுள்ள நிலமானது, கற்பாறை போல மிகவும் கடினமானதாக இருந்தது. அதை கண்ட விவசாயியானவன், தன் மகனானவன் அந்த நிலத்தை நன்றாக பண்படுத்த வில்லை என்று அறிந்து கொண்டான். பிரியமானவர்களே, தேவனுடைய வார்த்தையானது சம்பூரணமான விதைக்கு ஒப்பிடப்பட்டிருக்கி ன்றது. தேவ வார்த்தையை சிலர் ஏற்றுக் கொண்டாலும், அதனால் அவர்களுக்கு பலன் இல்லாமல் போவது ஏன்? ஏனெனில், தேவனு டைய வார்த்தை பிரசங்கிக்கப்படும் போது, சிலர் தங்கள் நிலைமை யை ஆராய்ந்து பார்த்து பாவத்திலிருந்து மனந்திரும்ப மனதில்லாமல், 'இவர் எனக்கே குத்துக் கதை போடுகின்றார்' என்று எரிச்சலடைந்து, தங்கள் இருதயத்தை கடினப்படுத்திக் கொள்கின்றார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் கர்த்தராகிய இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலும் இருந்தார்கள். அன்புள்ள கர்த்தர், எவ்வளவாய் சத்திய வேதத்தை அறிந்த மதத் தலைவர்கள் முன்னிலையில் போதித்தாரோ, அவர்களில் பெரும்பான்மையானோர்கள், அவ்வளவாய் மூர்க்கமடைந்து தங்கள் இருதயத்தை கடினப்படுத்தினார்கள். நீங்களோ அப்படிப்பட்டவர்களாக வாழாமல், தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்து கீழ்படிவுள்ளவ ர்களாக வாழுங்கள். வாழ்வில் நற்பலனை அறுவடை செய்யுங்கள்.
ஜெபம்:
அன்பின் பரலோக தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்ட துமான இருதயத்தை நீர் புறக்கணியீர். உம்முடைய வார்த்தைக்கு இணங்கி, மனந்திரும்புகின்ற, உணர்வுள்ள இருதயத்தை எனக்கு தந்து வழிநடத்திச் செல்வீராக. ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 51:10