புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 05, 2024)

விளக்கைப் போன்ற வார்த்தை

2 பேதுரு 1:19

பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக் கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நல மாயிருக்கும்.


ஒரு கிராமத்திலே வசித்து வந்த மனிதனொருவன், மாலை வேளையிலே, தன் சின்ன மகனானவனோடு கடைக்கு சென்று வீடு திரும்பும் வேளை யிலே திடீரென கார்மேகங்கள் சூழ்ந்து கொண்டதால், தன் கையிலே நெருப்புப்பந்தத்தை பிடித்துப் கொண்டு, கிராமத்தின் குறுகிய பாதை வழி யாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சின்ன மகனானவனோ, வழமைபோல, பாதையிலே அங்குமிங் குமாக ஓடி விளையாடிக்கொண்டிருந்ததால், அவனுடைய தகப்பனானவர் அவனை நோக்கி: மகனே, இருள் சூழ்ந்துவிட்டது, எனவே பாதையைவிட்டு விலகிப்போகாமல், இந்த வெளிச்சத்திலே நட என்று அவன் கையைப்பிடித்து நட த்திச் சென்றார். சற்று தூரம் சென்ற பின்னர், சில மின்மினி பூச்சிகளை கண்டு பரவசமடைந்த மகனானவன், தன் தகப்பனின் கையை உதறிவி ட்டு, பாதையைவிட்டு விலகி அந்த பூச்சியொன்றை பிடிக்க எத்தனித்த போது, பாதையருகேயிருந்த முள்ளொன்று அவன் கால்களில் ஏறிவிட்ட தால், அவ்விடத்திலே விழுந்து, சத்தமிட்டு அழுதான். தகப்பனானவர் ஓடிச்சென்று அவனைத் தூக்கி, அவன் காலிருந்த முள்ளை மெதுவாக எடுத்தார். அது அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. பிரியமான சகோதர சகோதரிகளே, இருள் சூழ்ந்திருக்கும் இவ்உலகத்திலே வாழ் ந்து கொண்டிருக்கும் நாம், இந்த உலகத்தின் ஆசை இச்சைகளை குறி த்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். கர்த்தருடைய வார் த்தையே நாம் செல்லும் வழிக்கு வெளிச்சமாக இருக்கின்றது. எல்லா சூழ்நிலைகளிலும் நாம் நிதானமுள்ளவர்களாக, அந்த வெளிச் சத்திலே நடந்து செல்ல வேண்டும். தேவனோடு நடந்து செல்லும், சில தேவ பிள்ளைகள், பழைய வாழ்க்கைக்குரிய மாம்சத்தின் இச்சைகளை காணும் போது, அந்த சிறிய பையனைப் போல, தேவனுடைய வழிநடத்துதலை உதறித் தள்ளிவிட்டு, தங்கள் ஆசைகளை தீர்க்கச் சென்று, தங்களை தாங்களே உருவக் குத்திக் கொள்கின்றார்கள். வேறு சிலரோ, காரணத்தோடேயோ, காரணமின்றியோ, மனிதர்கள் அவர்களை குற்றப்படுத் தும் போது, பொறுமையை இழந்து, தேவ வார்த்தையை மறந்து, தங்கள் கோபத்திலே, தீமைக்கு தீமை செய்ய தீவிரித்து விடுகின்றார்கள். நீங்களோ, உங்களை வேதனைக்குட்படுத்தாமல், கர்த்தருடைய வார்த்தையின் வெளிச்சதிலே நடங்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

கரம்பிடித்து நடத்திச் செல்லும் தேவனே, நான் இந்த உலகத்தின் ஆசை இச்சைகளுக்கோ, மாம்சத்தின் எண்ணங்களு க்கோ இடங்கொடுக்காமல், உம் வார்த்தையின் வெளிச்சத்திலே வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:105