புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 04, 2024)

கர்த்தர் வீட்டை கட்டாராகில்...

யோவான் 6:68

ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.


ஒரு ஊரிலே வசித்து வந்த செல்வந்தனொருவன், நதியோரமாக ஒரு நிலத்தை வாங்கி, அதிலே இரண்டு மாடிகள் கொண்ட மாளிகை யொன்றை கட்டும்படிக்கு அந்த ஊரிலுள்ள திறமைவாய்ந்த கொத்தனாரோடு (Mason) ஒப்பந்தம் செய்து கொண்டான். கொத்தனாரும் தாமதிக்காமல் வேலைக்கு கூலியாட்களை அமர்த்தி, கட்டுமானப் பணியை ஆரம்பித்தார்;. அத்திவாரத்தைப் போட்டு, சுவர்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் போது, அந்த செல்வந்தனின் நண்பனானவன் அவனை சந்திக்கும்படியாக அந்த ஊருக்கு வந்தான். அவ னுடைய நண்பனானவன் கட்டிட அமை ப்புக்களிலே தேர்ச்சியும் அனுபவமுமிக்க பொறியியாலாளராக இருந்ததால், அந்த செல்வந்தனை நோக்கி: நண்பா, இந்த ஊரின் நில அமைப்பின்படி, நீ போட்டிருக்கும் அத்திவாரம் நிலைக்காது. புயல் காற்றும் வெள்ளமும் அதை உடைத்துப் போடும், உனக்கு கொஞ்ச நஷ்டம் ஏற்பட்டாலும், பெரும் பாதகத்திலிருந்து நீ தப்பித்துக் கொள்ள விரும்பினால், இந்த கட்டிடத்தை உடைத்து, நான் கூறுவதை போல அத்திவாரத்தை போடு என்று ஆலோசனை கூறினான். தன் கவனயீன த்தை உணர்ந்து கொண்ட செல்வந்தனானவன், நண்பனின் நல்ஆலோ சனையை கேட்டு, அதன்படிக்கு மாளிகையை கட்டினான். அதனால் அந்த மாளிகையானது புயல்காற்றிலும், பெரு வெள்ளத்திலும் அசை யாமல் உறுதியாக இருந்தது. பிரியமனாவர்களே, உங்கள் வாழ்க்கை யானது எதின்மேல் கட் டப்பட்டிருக்கின்றது? சில மனிதர்கள் தங்கள் வாழ்க் கையை பலவிதமாக அமைத்துக் கொள்கின்றார்கள். அந்த வாழ்க் கையின் அத்திவாரம் இந்த உலக கொள்கைகள், தத்துவங்கள், கல்வி, செல்வம், அந்தஸ்து போன்ற பற்பல காரியங்களை அடிப்படையாக கொண்டு அமைக்கப் டுகின்றது. அவைகள் இந்த உலகத்தால் அங்கீhரம் பெற்றுதும், பார்வைக்கு எடுப்பானதாகவும், பேசுவதற்கு அறி வுள்ளதாகவும் காணப்படலாம். ஆனால், அழிவுக்குரியவைகளின் மேல் கட்டப்பட்டவைகள் அநித்தியமானவைகள். அழிவுக்குரியவைகள் அழி ந்து போகும் போது, அதில்மேல் கட்டப்படதும் அழிந்து போய்விடும். அழியாததும், மாசற்றதுமான தேவவார்த்தையின்மேல் கட்டப்பட்ட வாழ் க்கையானது அழிவை காண்பதில்லை. தேவவார்த்தையே நல்ல ஆலோ சனை. தேவ வார்த்தையே வாழ்க்கையின் உறுதியான அத்திவாரமாக இருக்கின்றது. தேவ வார்த்தையானது நித்தியத்திற்குரியதாகையால், அதன் மேல் கட்டப் பட்ட வாழ்க்கையும் நித்தியமானதாகவே இருக்கும்.

ஜெபம்:

அழியாமையைத் தரித்துக் கொள்ளும்படி என்னை அழைத்த தேவனே, நித்திய வாழ்வு தரும், அரும் பொக்கிஷமாகிய, உம்முடைய ஜீவனுள்ள வார்த்தையின்மேல் என் வாழ்க்கையை அமைக்க எனக்கு உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:21-27