தியானம் (தை 31, 2024)
அசையாத நம்பிக்கை
சங்கீதம் 33:20
நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
பொருளாதாரத்தின் பெருக்கமானது மனிதனை இரட்சிக்கக் கூடுமோ? படைபலம் ஒரு ராஜ்யத்தை காக்கக்கூடுமோ?இன்றைய உலகிலே பெரும்பான்மையான மனிதர்கள் தங்கள் பொருளாதார நிலைமையை மேம்படுத்தும்படி அயராது உழைக்கின்றார்கள். அந்த நிலைமையை அடைவதே முதன்மையானதென பிள்ளைகளு க்கும் கற்றுக் கொடுகின்றார்கள். அப்படியாக அயராது உழைக்கும் மனிதர்க ளில் சிலர் அந்த நிலைமையை அடைகின்றார்கள். ஆனால், அவர் கள் அடைந்து கொள்ளும் வள ர்ச்சி அவர்களுக்கு மனத்திருப் தியை கொடுப்பதில்லை. மாறாக அவர்கள் பொருளாசைக்குள் தாங்கள் சிக்கிக் கொண்டதை உணராமல் இன்னும் அதிகம் வேண்டும் என்று நாடித் தேடுகின்றார்கள். அதுவே அவர்களின் நம்பிக்கையாக மாறி விடுகின்றது ஆனால் ஆபத்து நாட்களிலும், இடுக்கண் சூழ்ந்து கொள்ளும் போதும், அவை அவர்களை விடுவிப்பதில்லை. 'தங்கள் செல் வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமை பாராட் டுகிற, ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என் றென்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும் பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே. அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயி ருக்கிறது. அது ஒருபோதும் முடியாது. ஞானிகளும் மரித்து, அஞ் ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்ற வர்களுக்கு வைத்துப் போகிறதைக் காண்கிறான். தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலை முறை தலை முறையாகவும் இருக்கு மென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாம ங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள். ஆகிலும் கனம் பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிற தில்லை. அழிந்து போகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.' (சங்கீ தம் 49:6-12). கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழி த்திருக்கிறது விருதா. (சங்கீதம் 127:1-2) சிலர் இரதங்களைக் குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மை பாராட்டுவோம். (சங்கீதம் 20:7)
ஜெபம்:
மேலானவைகளை நாடுங்கள் என்று கூறிய தேவனே, நிலை யற்ற உலகத்தின் அழிந்து போகும் பொக்கிஷங்களை நாடித் தேடாமல், உமக்கு பயந்து உம்முடைய வழியிலே நடக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 146:1-10