புதிய நாளுக்குள்..

தியானம் (தை 30, 2024)

எண்ணற்ற பாரங்கள்?

நியாயாதிபதிகள் 6:14

உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ;


அப்பொழுது கிதியோன் கர்த்தருடைய தூதனை நோக்கி: 'ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்க ளுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவர வில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங் களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடு த்தாரே' என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உன க்கு இருக்கிற இந்தப் பலத் தோடே போ. இரட்சிப்பு உன்னால் உண்டாகும், உன்னை அனுப்பு கிறவர் நான் அல்லவா என்றார். அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் என் ஜனத்தை எதினாலே ரட்சி ப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது. என் தக ப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான். கிதியோனின் மனதின் ஆதங்கத்தை சற்று சிந்தி த்துப் பாருங்கள். துன்பங்கள் எண் ணிக்கை அதிகம். எதிரிகளின் பெலன் அதிகம், தானே பெலனற்றவனும் எல்லாரிலும் சிறியவனுமாயிருக்கின்றேன் என்றான். அவனுடைய பார் வையிலே எதிரிகளின் இலக்கத்திற்கும், எண்ணிக்கைக்கும், தன்னிட முள்ள பெலத்திற்கும் தொடர்பே இல்லை என்று எண்ணிக் கொண்டான். ஆனால், கர்த்தரோ, அவனோடுகூட முந்நூறு பேரை தெரிந்து கொண்டு, எண்ணிக்கையிலும், பெலத் திலும் அதிகமாகயிருந்த எதிரியின் படைகளை ஒரே இராத்திரியிலே முறியடிக்க கிருபை செய்தார். பிரிய மான சகோதர சகோதரிகளே, ஒரு வேளை சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக, நீங்களும் கிதியோனைப் போல மனம் நொந்திருக்கலாம். கர்த்தருடைய பெலன் கடந்த காலத்திற்குரியதும், அவருடைய அற்புத அதிசயமான செயல்கள் பூர்வீகத்திற்குமுரியது என்று உங்கள் பெல வீனத்தில் நீங்கள் எண்ணிக் கொள்ளலாம். நீங்கள் பயப்படுகிற நாளில் கர்த்தலை நம்புங்கள். உங்கள் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிரு க்கின்றார். உங்கள் கண்ணீரை தம்முடைய துருத்தியில் சேர்த்து வைத் திருக்கின்றவர் அவைகளை தம்முடைய கணக்கில் வைத்திருக்கின்றார். எனவே, உங்களை சுற்றிசூழும் எண்ணற்ற பாரங்களை கண்டு சோர்ந்து போகாமல், எண்ணிலடங்கா நன்மைகளை செய்யும் கர்த்தரை நோக்கிப் பாருங்கள். கரை நோக்கி வரும் அலைகள் மறுமபடியும் கடலுக்குள் செல்வது போல, உங்கள் வாழ்வை நோக்கி வரும் துன்பங்கள் துயரங்களை கர்த்தர் நீக்கிப் போடுவார்.

ஜெபம்:

என் பட்சத்தில் இருக்கும் தேவனே, யோர்தான் புரண்டு வரும் போல், பல சவால்கள் என்னை நோக்கி வந்தாலும், அவை ஒவ்வொன்றையும் நான் மேற்கொள்ள நீர் உதவி செய்து வருவதற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 57:1-2