தியானம் (தை 29, 2024)
நன்மை செய்வதில் ஓய்ந்து போகாதிருங்கள்
லூக்கா 6:35
அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே.
ஒரு சமயம், கர்த்தராகிய இயேசு எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார். அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோக முள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். அவர்க ளில் ஒருவன் தான் ஆரோக்கிய மானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்;. அவன் சமாரியனாயிருந்தான். அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமை ப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பி வரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். ஆம் பிரியமானவர் களே, பத்து பேரில் ஒருவன் மாத்திரம் நன்றியுள்ளவனாக இருந்தான். உங்கள் வாழ்க்கையிலும், அநேகருக்கு அவர்கள்; சிறுமைப்பட்ட நாட்க ளிலே, நீங்கள் ஆதரவாக இருந்து, பல உதவிகளை செய்திரு க்கலாம். அவர்கள் வளர்ந்து பெருகும் போது, நீங்கள் செய்த நன்மைகளை அவர்கள் மறந்து போய்விட்டால், அதைக் குறித்து ஆச்சரிப்படுகின்றீர்களா? உங்கள் வாழ்க்கை யிலே இலக்கங்களும் எண்ணிக்கைக ளும் அர்த்தமற்றதாக இருக்கும் போது, அதைக்குறித்து நொந்து கொள்ளாதிருங்கள்! நீங்களோ, ஆண்டவர் இயேசுவின் நாமத்திலே, பிதாவாகிய தேவனுடைய நாமம் மகிமைப்படும்படி நன்மைகளை நடப்பித்து வருகின்றீர்கள். அவ்வண்ணமாக அவரையே நம்பி தொடர்ந்து நன்மை செய்யுங்கள்! மற்றவர்களுடைய வாழ்க்கையிலே நன்மையானவைகளை விதைப்பதில் ஓய்ந்து போகாதிருங்கள். 'உங்கள் சத்துருக்களைச் சிநே கியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமான வருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியா தவர்க ளுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே.' பரலோகிலே பலன்களின் எண்ணிக்கை அதிகதிகமாயிருக்கும்.
ஜெபம்:
என்னை அழைத்த தேவனே, நீர் கட்டளையிடப்பட்ட யாவற்றை யும் செய்தபின்பு: நான் அப்பிரயோஜனமான ஊழியக்காரன், செய்ய வேண்டிய கடமையைமாத்திரம் செய்தேன் என்ற மனதோடு வாழ என க்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கலாத்தியர் 6:9