புதிய நாளுக்குள்..

தியானம் (தை 26, 2024)

பார்வையும் சிந்தையும்

நீதிமொழிகள் 4:25

உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது


ஒரு பிள்ளையானவன் பாடசாலைக்கு சென்று கற்பிக்கப்படும் பாடங் களை கற்பதற்கு வேண்டிய ஒழுங்குகள் யாவையும் அவனுடைய பெற் றோர் அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்கள். அதுமட்டுமல்லா மல், இன்ரநெற்றை எதற்காக உபயோகிப்பது, அதில் எதைப் பார்க்க வேண்டும், எதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமாக வும் தெளிவாகவும் அவனுக்கு கூறி யிருந்தார்கள். அந்த பிள்ளையான வனுடைய வாழ்க்கையிலே யாவும் ஒழுங்காகவும் கிரமமாகவும் நடை பெற்றுக் கொண்டிருந்து. ஒருநாள் அவனுடைய சக மாணவர்களிலொ ருவன் இன்ரநெற்றிலுள்ள வீடியோ பதிவொன்றை பார், மிகவும் சுவாரசியமானது என்று எழுதி அனுப்பி யிருந்தான். அதற்கு அவன் மறு மொழியாக: என் பெற்றோர் இவை களை பார்க்க வேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள் என்று எழுதி னான். அந்த சகமாணவனானவன்: தொழில்நுட்பத்தை குறித்து உன் பெற்றோருக்கு எல்லாம் தெரியம் என்றல்ல. இதை சும்மா பார், எந்த தவறுமில்லை என்று அறிவுரை கூறினான். அந்தப் பிள்ளையானவனும் சகமாணவர்களுடைய உந்துதலினாலே அந்த வீடியோ பதிவை பார்த் தான். ஒன்றின்பின் ஒன்றாக மற்றய பதிவுகளை பார்க்க ஆரம் பித்தான். தற்போது அவன் மனதிலே, பல ஆசைகள், பெற்றோரின் ஆலோச னையை குறித்து வௌ;வேறான எண் ணங்களும் தோன்ற ஆரம்பித்து விட்டது. இவ்வண்ணமாகவே இன்று சில விசுவாசிகளின் மனநிலைகளும் மாறிப்போய்விடுகின்றது. தேவனை அறிகின்ற அறிவில் வளரும்ப டிக்கு தேவையான யாவற்றையும் அவர்கள் அறிந் திருந்தாலும், வாழ்க் கையில் பரபரப்பு இல்லை என்று எண்ணி, இன்நெற் ஊடகங்களிலே, தங்கள் பார்வையிலே தீமையில்லாத காரியங்கள் இன்னதென்று தீர்மா னம் செய்து கொண்டு, அவைகள் தங்கள் மனதிலே குடி கொள்வதற்கு இடங் கொடுக்கின்றார்கள். நாளடைவிலே ஒன்றின்பின் ஒன்றாக பல காட்சிகளை பார்த்து, பல தத்துவங்களை கேட்டு, பரிசுத்தத்தை குறித்து உணர்வற்றவர்களாக மாறிவிடுகின்றார்கள். இதனால் தமது வாழ்வில் கனியற்ற நிலையை அடைந்து விடுகின்றார்கள். ஆதியிலே ஏவாள் தேவ னுடைய தெளிவானதும் இலகுவானதுமான ஆலோசனையை மீறி, பிசாசானவனோடு சம்பாஷனை செய்ததால் அவள் மனநிலை மாறிப் போய் விட்டது. எனவே, நாமும் வஞ்சிக்கப்பட்டு போய்விடாதபடிக்கு தேவ வார்த்தையிலே நிலைத்திருப்போமாக.

ஜெபம்:

அன்பின் தேவனே, என் காலைத் தீமைக்கு விலக்கி காத்துக் கொள்ளும்படிக்கு, வலது புறமும் இடது புறமும் சாயாமல், உம்முடைய வார்த்தையிலே நிலைத்திருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிந டத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 4:23-27