புதிய நாளுக்குள்..

தியானம் (தை 24, 2024)

யார் உங்களை ஏற்றுக் கொள்கின்றார்கள்?

யோவான் 15:19

நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்;


ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்டஆண்டு முடிவின் கொண் டாடத்திற்கு அந்த ஸ்தானத்தின் இயக்குனர், அவருடைய சில நண்ப ர்களை அழைத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று, விசுவாசியாக இரு ந்த இரண்டு பேர் அந்த மாலை நேரக் கொண்டாடத்திற்கு சென்றிருந் தார்கள். விழா ஆரம்பித்ததும், காரியங்கள் யாவும் ஒழுங்காகவும், ஒழுக் கமாகவும் நடைபெற்றுக் கொண் டிருந்தது. ஆனால், குறித்த நேர த்திற்குபின், எதிர்பாராத களியா ட்டக் காரியங்கள் அங்கே இடம் பெற ஆரம்பித்தது. அங்கு சென்ற இரண்டு நண்பர்களில் ஒருவன், ரோமாபுரியிலிருந்தால் ரோம ரைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்று, அங்குள்ளவர்களோடு தானும் ஒருவனாக இணைந்து, அவர்களைப் போல காணப்பட்டான். ஆனால், இரண்டாவது நண்பனோ, அந்த உலக களியாட்ட நிகழ்வுகளு க்கு பழக்கப் படாதவனாகையாகல், அவர்களோ இணைந்து கொள்வது எப்படி என்றுகூட அறியாதிருந்தான். அங்குள்ள மற்றய விருந்தாளிகள் இவனை ஒரு புறம்போக்கானவனைப் போல பார்த்தார்கள். அந்த மண் டபத்திலே இருப்பது அவனுக்கு அசௌகரியமாக இருந்ததினால், அவன் எழுந்து தனியாக வீடு திருப்பினான். அந்த இரவிலே ஒருவன் இந்த உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்களுடைய நன்மதிப்பை பெற் றான். அவனுடைய திறந்த மனமுடைய மத நம்பிக்கையை யாவரும் மெச்சினார்கள். ஆனால், மனிதர்களுடைய அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும்படி, தன்னுடைய சாட்சியை இழந்து போனதை அவன் உணராதிருந்தான். உலக ஸ்நேகமுள்ளவனாக இருந்தான். ஆனால், மற்றவனோ, இந்த உலகத்தாரால் நிராகரிக்கப்பட்டான். ஊரோடு ஒத் தோடத் தெரியாதவன் என்று அவனை கேளி செய்தார்கள். உலகத்தால் பகைக்கப்பட்டான். ஆனாலும், அவனோ, மனிதர்களுக்கு பிரியமாக இருப்பதைவிட, ஆண்டவர் இயேசுவுக்கு பிரியமாக இருப்பதையே தெரி ந்து கொண்டான். பிரியமானவர்களே, 'நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயி ராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்ட படியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, இந்த உலகத்தினால் உண்டாகும் அழுத்திற்கு உங்களை ஒப்புக் கொடுக்காதிருங்கள். மனிதர்கள் முன் னிலையிலே உங்கள் நற்சாட்சியை காத்துங் கொள்ளுங்கள்.

ஜெபம்:

உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கும்படி என்னை அழைத்த தேவனே, இருளின் அதிகாரத்திற்கு உட்பட்ட களியாட்டங்களுக்கு நான் இடங்கொடாமல், என் நற்சாட்சியை காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தெச 2:4