புதிய நாளுக்குள்..

தியானம் (தை 23, 2024)

பேச்சும் கிரியையும்

லூக்கா 21:8

நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;


ஒரு பெற்றோரின் ஐம்பதாவது ஆண்டு திருமண நாள் நிறைவை கொண்டாடும் முகமாக, அவர்களுடைய பிள்ளைகள், பெருந் தொகை யான பணத்தை செலவு செய்து, உலகத்தின் நாலு திசைகளிலுமிருந்து குறித்த நாளிலே ஒன்று கூடினார்கள். விழாவின் நாளிலே, பிள்ளைகள் ஒவ்வொருவரும் உற்றார், உறவினர், நண்பர்கள் முன்னிலையிலே தங்கள் பெற்றோரைக் குறித்து உரை யாற்றினார்கள். பெற்றோரை குறி த்த மேன்மையான காரியங்களை பேசி, அவர்களின் அர்பணிப்பையும், அன்பையும் பெருமையாக கூறினா ர்கள். அவர்கள் பேச்சிலே குறை யோ, தவறேதும் இருக்கவில்லை, ஆனால், பிள்ளைகளின் வாழ்க்கை முறைமையோ, பெற்றோரின் அர்பணிப்புக்கும், அன்புக்கும் ஏற்புடையதாக இருந்ததில்லை. அந்த நிலையை பெற்றோர் மற்றும் நெருக்கிய உறவுகளும் நன்கு அறிந்திரு ந்தார்கள். இவ்வண்ணமாகவே, 'இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணு கிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது' (ஏசாயா 29:13). என்று தான் தெரிந்து கொண்ட ஜனங்களின் வாழ்க் கையைக் குறித்து தேவனாகிய கர்த்தர்தாமே, தம்முயை தாசனாகிய ஏசாயா வழியாக சுட்டிக் காட்டினார். பேசும் வார்த்தைகள் உண்மையுள் ளவைகள் ஆனால் செய்யும் கிரியைகளோ பேசும் வார்த்தைகளுக்கு முரணாக இருக்கின்றது. அறிக்கையிலே ஆண்டவர் இயேசுவே இரட் சகர் ஆனால் கிரியைகளினாலே அவரை மறுதலிக்கின்றார்கள். எழுத் திலே நாங்கள் கிறிஸ்தவர்கள் ஆனால் வாழ்க்கையிலோ கிறிஸ்து இல்லை. பிரியமானவர்களே, இவைகளை குறித்து நாம் மிகவும் கருத் துள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த நாட்களிலே, யாரும் உங்க ளிடம் வந்து நீ இயேசுவை மறுதலிக்கும்படி பலவந்தம் பண்ணுவ தில்லை. அத்தகைய செய்திகளை கேள்விப்படுவது மிகவும் அரிதாக இருக்கின்றது. ஆனால், மறைமுகமாக உங்கள் கிரியைகள் வழியாக கிறிஸ்துவை மறுதலிக்கும்படியான போக்குகள் இந்த உலகத்திலே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இறுதி நாளிலே நாம் கர்த்தர் முன்பாக நிற் கும் போது, நாங்கள் எப்போது உம்மை மறுதலித்தோம் என்ற கேள் விக்கு இடம் இல்லாதிருக்கும்படிக்கு, இந்த நாட்களிலே எச்சரிக்கையு ள்ளவர்களாக இருப்போம். தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாக இருக்கும் மனிதர்களைவிட்டு விலகி பயபத்தியோடு தேவனை ஆராதிப்போமாக.

ஜெபம்:

பரிசுத்த வாழ்க்கைக்கென்று என்னை வேறு பிரித்த தேவனே, என் வாயின் வார்த்தைகளும், இருதயத்தின் தியானமும், என் கிரியைகளும் உமக்கு ஏற்புடையதாக இருக்கும்படி என்னை வழிநடத்திச் செல்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:12-14