புதிய நாளுக்குள்..

தியானம் (தை 22, 2024)

அலட்சியமான வாழ்க்கை வேண்டாம்

எபிரெயர் 12:16

ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.


ஈசாக்கு என்னும் மனிதனுக்கு ஏசா, யாக்கோபு என்னும் பெயர்களையு டைய இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். தேவ ஒழுங்கின்படி, சேஷ;டபு த்திர சுதந்தரம் மூத்தவனுக்குரியது. ஒருநாள் ஏசா வெளியி லிருந்து களைத்து வந்தபோது, இளையவனாகிய யாக்கோபு கூழ் சமைத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவ ப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்;. அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ;ட புத்திர பாகத்தை இன்று எனக்கு விற்றுப் போடு என்றான். அத ற்கு ஏசா: இதோ, நான் சாகப் போகி றேனே, இந்தச் சேஷ;ட புத்திர பாகம் எனக்கு என்னத்திற்கு என் றான். அப் பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ;ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான். அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப் பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படியாக மூத்தவாகிய ஏசா, தன் வயி ற்றுக்காக, ஒரே நாளிலே, தன் சேஷ;ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணி இழந்து போனான். இன்று சில விசுவாசிகளும் கூட, கல்வி, வேலை, திருமணம், குடும்ப கௌரவம், உறவுகள், நண்பர்கள், ஆஸ் திகள், உல்லாசப் பயணங்கள் போன்ற வற்றிகாக, தேவன் நியமித்த ஒழுங்குகளை அலட்சியம் பண்ணிக் கொள்கின்றார்கள்? கல்வி அவசி யமல்லவா? சாப்பிடவதற்கு வேலை தேவவையல்லா? பிள்ளைகள் விரும்புகின்றவர்களை திருமணம் செய்தால் என்ன? உறவுகள் நண் பர்கள் அவசியமல்லவா? ஒருவேளை இந்த கேள்விகளுக்குரிய பதில் அவரவர் மனநிலையின்படி ஆம் என்று இருக்கலாம். ஆனால், இவற் றில் எதுவும் நித்திய ஜீவனுக்கு இணையாகுமா? இவைகளால் ஒருவன் தன் ஆத்துமாவை கெடுத்துக் கொண்டால், அவன் முடிவு என்னவாகும்? பிரியமானவர்களே, இன்றைய நாளிலே அழைப்பின் மேன்மையை சற்று ஆழமாக தியானம் செய்யுங்கள். உங்களுடைய நீதியை இந்த உலக த்திலே ஏறத்தாழ யாவரும் அங்கீகரித்தாலும், அந்த நீதியினால் நித்திய ஜீவனை உண்டாகாது. எனவே, தேவ நீதி உங்கள் வாழ்வில் நிறைவேற இடங்கொடுங்கள். பிற்பாடு ஏசா ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பி, அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறு தலைக் காணாமற்போனான்.

ஜெபம்:

கிருபையின் நாட்களை ஈவாக கொடுத்திருக்கும் தேவனே, இந்த அருமான நாட்களிலே, அழிந்து போகும் இந்த உலக வாழ்க்கைக்காக மேன்மையானவைகளை இழந்து போகாதபடிக்கு என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 145:17