புதிய நாளுக்குள்..

தியானம் (தை 21, 2024)

அந்த ஒரு நாள்!

மத்தேயு 25:13

மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையை யாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.


திருமண ஆராதனை எளிமையாகவும் இனிமையாவும் இருக்க வேண் டும். எவ்வளவு குறுகியதாகக்கூடுமோ அவ்வளவு குறுகியதாக்கும்படி யாக ஒரு திருமண தம்பதிகள் முயற்சி செய்தார்கள். சீக்கிரமாக ஆலய வளாகத்தைவிட்டு போனவுடன், எவ்வளவு அதிக நேரம் கொண்டாட்ட மண்டபத்தில் இருக்க அனுமதி உண்டோ, அவ்வளவு நேரமும் அங்கே இருந்து, உண்டு, குடித்து, சம்பா ஷpத்து, ஆடிப்பாடி, நேரத்தை களித் தார்கள். திருமண நாள் ஒரு நாள், அந்த நாளிலே, குடும்ப வாழ்க் கையை ஆசீர்வதிக்கும் ஆண்ட வராகிய இயேசு கிறிஸ்துவை கன ப்படுத்த வேண்டும் என்னும் மேன் மையான நோக்கத்தை அசட்டை செய்து, திருமண விழா ஒருநாள், எனவே தங்கள் மனதும், மாம்சமும், நண்பர்களும் விரும்பும் காரியங்கள் யாவையும், துணிகரமாக நடப்பிக்க ஆவலுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆலயத்திலே ஆசியைப் பெற்று, ஆலய வளாகத்திற்குள் ஆண்டவர் இயேசுவை விட்டுவிட்டு, உலகத்தின் போக்கிற்கு தங்களை மனதார ஒப்புக் கொடுகின்றார்கள். இவ்விதமாக ஒரு விசுவாசியின் வாழ்க்கையானது அந்த விசுவாசியின் திருமண நாளை பிரதிபலிக்கின்றது போல, ஒரு விசுவாசியின் திருமண நாளும் அந்த விசுவாசியின் வாழ்க்கையை பிரதிபலிக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகும்படி அழைக்கப்பட்ட சகோதர சகோதரிகளே, கர்த்தரு டைய நாளும் குறித்த ஒரு நாளில் வரும். தன் பாடங்களை ஊக்கமாக படித்து, குறித்த நாளிலே வர இருக்கும் பரீட்சைக்கு ஆயத்தப்படும் ஒரு நல்ல மாணவனைப் போல, நாமும், அந்த ஒரு நாளுக்காக ஆயத் தமுள்ளவர்களாக காணப்பட வேண்டும். சில தேவ பிள்ளைகள், தாங் கள் காத்துக் கொண்ட பரிசுத்த வாழ்க்கையை ஒரு நாள் மாம்ச இன்ப த்திற்காக ஒரே நாளிலே கெடுத்துக் கொள்கின்றார்கள். நினையாத நாளிலே கர்த்தருடைய நாள் வரும் எனவே அந்த நாள் திருடனை ப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் விழிப்புள்ள வர்களாக காணப்படவேண்டும் என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக் கின்றோம். கர்த்தருடைய நாள் சீக்கிரமாய் வரும். எனவே, நோவாவின் நாட்களில் இருந்த ஜனங்களைப் போல, உணர்வற்றவர்களாக வாழாமல், கர்த்தருடைய வார்த்தையில் நிலைத்திருப்போமாக.

ஜெபம்:

பரலோக பிதாவே, இந்த உலகத்திற்கு ஒத்த வேஷந்தரித்து, மனக்கண்கள் குருடுபட்டு போய்விடாதபடிக்கு, வெளிச்சத்தின் பிள்ளை யாவும், பகலிலே நடக்கின்றவனாகவும் இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தெச 5:1-8