புதிய நாளுக்குள்..

தியானம் (தை 19, 2024)

நீதிக்குள் கொஞ்ச அநீதி இருந்தால் என்ன?

கலாத்தியர் 5:9

புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்தமாவனைத்தையும் உப்பப்பண்ணும்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த நண்பர்களில் சிலர், கடற்கரைக்கு அருகே ஒன்றுகூடி கூழ் சமைத்தார்கள். அவர்கள் அதை சமைத்து முடித்து, ருசிபார்ப்பதற்கு முன்னதாக, அந்த கூழ்ப் பானைக்குள்ளே ஒரு சிறிய விஷப்பூச்சி விழுந்து விட்டது. அதனால் அந்த கூழ் சாப்பிடுவதற்கு உத வாமற் போய்விட்டது. பார்ப்ப தற்கு அது கூழ் போல இருந் தாலும், பார்ப்பவர்கள் அதை கூழ் என்று கூறினாலும், உண் மையிலே அதை விஷம் என்றே கூறமுடியும். அவ்வண்ணமா கவே, நீதிக்குள் கொஞ்ச அநீதி இருக்குமாயின் அதை நீதி என்று கூற முடியாது. சுத்தமான தண்ணீர் இருக்கும் ஒரு கிண்ணத்திலே, ஒரு துளி விஷத்தை சேர்த்துக் கொண்டால் அது முழுவதும் விஷமாகிவிடுமல்லவோ? சத்திய வேத த்தை கொஞ்சம் சமரசம் செய்து பேசினால் என்ன? இப்படியாக பரிசுத் தத்தை சமரசம் செய்து, கொஞ்சம் அசுத்தத்தை சேர்த்துக் கொள்ளு கிறவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களோடு ஐக்கியமாக இருப்பவர் களை எப்படி அழைக்க முடியும்? கொஞ்சம் பரிசுத்தமுள்ளவர்கள் என்று கூற முடியுமா? நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளு க்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. தவறுகள், குறைவுகள் விசுவாசிகளுடைய வாழ்கையிலே இடம்பெறுவதுண்டு. அப்படிப்பட்ட வேளைகளிலே, உண்மையுள்ள விசுவாசிகள் தங்கள் தவறுகளை அறிக்கையிட்டு விட்டுவிட வேண்டும். 'நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.' ஆனால், சவுல் ராஜாவைப்போல, தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல், அவை களை நியாப்படுத்தி சமரசம் செய்ய முயலும் போது, நாம் தேவனை பொய்யராக்குறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. (1 யோவான் 1:9-10). விலைமதிக்கமுடியாத இரட்சிப்பை பெற்ற பிரியமான சகோதர சகோதரிகளே, கிருபையின் நாட்களில் நாம் வாழ் கின்றோம். தேவனுடைய நீடிய பொறுமையை அசட்டை செய்யாமல், காலம் கடந்து சென்று இருதயமானது கடினப்ப்பட்டு, உணர்வற்று போவ தற்கு முன்னதாக யாவரோடும் ஐக்கியமாக இசைந்திருக்கின்றீ ர்கள் என்பதை தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பாருங்கள்.

ஜெபம்:

குறைகளை நிறைவாக்கும் தேவனே, நான் விட்டுவந்த உலகத் தின் உறவுக்குள் மறுபடியும் இழுப்புண்டு போகாதபடிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து உம்முடைய சத்திய வழியிலே நடக்க உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 14-18