புதிய நாளுக்குள்..

தியானம் (தை 18, 2024)

நோவுகள் மேற்கொள்ளும் இடங்கள்

2 கொரிந்தியர் 4:16

எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது.


ஆண்டவராகிய இயேசுவின் ஊழியக்காரனாகிய ஸ்தேவானானவன், சத்தியத்தை தூய்மையாக பேசுகின்ற மனிதனாக இருந்து வந்தான். அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க ஒருவராலும் கூடமாற்போயிற்று. அந்த வேளையிலே அவனை குற்றப்படுத்;தும்படி, அந்நாளிலிருந்த மதத் தலைவர்கள், பொய்சாட்சிகளை நிறுத்தினார்கள். ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக் கக் கண்டார்கள். தேவகாரியங்களை உணரகூடாதபடிக்கு அவர்களுக்கி ருந்த மனக்கடினத்தை அவன் அவன் கண்டித்து உணர்த்தினான். ஆலோ சனைச் சங்கத்தார் அவன்மேல் எரி ச்சலடைந்ததினால் அவனை கைது செய்தார்கள். அவனை கொன்று போடும் படிக்கு பொய்சாட்சிகளை தேடினார்கள். தேவ வார்த்தைகளை கேட்டபோது அவர்கள் அவன்மேல் மூர்கமடைந்தார்கள். பலர் முன்னிலையிலே, அவனுக்கு கல்லெறிந்தா ர்கள். இத்தகைய அநியாயங்களை அவர்கள் ஸ்தேவானுக்கு செய்தி ருந்தும், அவன் மனதிலோ, அந்த சங்கத்திலே இருந்தவர்களை குறித்த கசப்பு ஒட்டிக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் வாக்களிக்கப்பட்ட மெசியா இயேசு என்பதை உணராமல், அழிந்து போகக்கூடாது என்ற எண்ண முள்ளவனாகவே இருந்தான். அவர்கள் அவன்மேல் கல்லெ றியும் போது, அவனோ முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள் மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, கர்த்தருக்குள் நித்திரையடைந்தான். இன்று உங்களை குறித்தோ, உங்கள் குடும்பங்களைக் குறித்தோ, நியா யமாகவோ அநியாயமாகவோ மனிதர்கள் குறைகூறும் போது, உங்கள் மனதிலே எழும்புகின்ற உணர்வுகள் என்ன? சபையிலே நன்மைக்கு சக விசுவாசிகள் தீமை செய்யும் போது, உங்கள் மனதிலே கசப்பு ஒட்டிக் கொள்கின்றதா? அப்படியானால், சாவுக்கேதுவான புறம்பான பழைய மனுஷனுக்குரிய மாம்ச சுபாவங்களே உங்களை ஆண்டு கொள்கின்றது. எங்கே மாம்சத்தின் ஆளுகை உண்டோ, அங்கே மாம்சத்திற்குரியவை கள் குடிகொள்ளும். ஆவிக்குரிய இருதயத்திலே வன்மம், மனக்கசப்பு, பிரிவினை வலுவிழந்ததாகவும், செயலற்றதாகவும் இருக்கும். உங்கள் வாழ்விலே கசப்புக்களும் நோவுகளும் குடிகொண்டிருந்தால், உங்கள் இருதயத்தை தேவவார்த்தையின் வெளிச்சத்திலே ஆராய்ந்து பாருங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்து கொள்ளும்; இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - அப் 7:59-60