புதிய நாளுக்குள்..

தியானம் (தை 17, 2024)

அழியாமை நம்மை ஆண்டு கொள்ளட்டும்

1 கொரிந்தியர் 15:48

மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.


ஒருவன் உங்களுக்கு ஒரு கன்னத்தில் அறையும் போது நோவு ஏற்படுகின்றது. தங்கள் சரீரங்களை மிகவும் சிறப்பாக கவனித்து, பராமரித்து வருகின்றவர்களுக்கும் சரீரத்திலே வியாதிகளும், பெலவீனங்களும் உண்டாகின்றது. இந்த நோவுகள், வியாதிகள், பெலவீனங்கள் அழிவுக்குரிய சரீரங்களிலேயே ஏற்ப டுகின்றது. இறுதியிலே மரணமானது சரீத்தை ஆட்கொள்கின்றது. நாம் அழியாமையை தரித்துக் கொள்ளும் போது, அங்கே மரணமும், துக்கமும், அலறுதலும், வருத்தமும் எற்படுவதி ல்லை. (வெளி 21:4). வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிக ளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே. நாம் விண்ணவருக்குரிய அழியாமையை தரித்துக் கொள்ளும்வரை, நாம் பூமியலே வாழ்ந்தாலும், இந்த உலகத்திற்குரிய போக்கிலே வாழத்தேவையில்லை. விண்ணுல கின் மகிமையை துறந்து, மண்ணுலகிற்கு வந்த நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுதாமே, நமக்காக தம் சரீரத்திலே பாடுகளை பட்டார். அந்த வேளையிலே, அவர் சரீரத்தில் ஏற்பட்ட நோவுகள், அவமானங்கள் நிந்தைகள் எதுவுமே அவரை ஆண்டு கொள்ளவில்லை. அதுபோலவே, நாமும் அவருடைய சாயலிலே நாளுக்கு நாள் வளர்ந்து பெருக வேண்டும். 'நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவ னால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிரு ந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.' (1 கொரி 2:12). அந்த ஆவி க்கேற்றபிரகாரமாய் நாம் வாழும் போது, அழிவுக்குரிய சரீரத்தின் ஏற் படும் நோவுகள்;, சிந்தைகள், அவமானங்கள் ஒன்றும் நம்மை ஆண்டு கொள்ளப் போவதில்லை. எப்படியெனில், நன்மையேயன்றி, தீமை ஏது வும் செய்யாத நம்முடைய ஆண்டவராகிய இயேசுதாமே, சிலுவையிலே மரிக்கும் தறுவாயிலும், பிதாவே, இவர்கள் அறியாமல் செய்கின்றார்கள், இவர்களை மன்னியும் என்று தன்னைத் துன்பப்படுத்துகின்றவர்களுக்காக வேண்டிக் கொண்டார். அவரிடம் இருந்த அழியாமைக்குரிய சத்திய ஆவியானவர் நம்மோடும் இருக்கின்றார். எனவே சாவுக்கேது வானவைகள் நம்மை ஆண்டுகொள்ளாதபடிக்கு துன்பங்கள் மத்தியிலும் அழியாமை நம்மை ஆண்டுகொள்ள இடம் கொடுப்போமாக.

ஜெபம்:

உம்முடைய குமாரனாகிய இயேசுவின் சாயலடைய என்னை அழைத்த தேவனேஇ கிறிஸ்துவின் சிந்தை என்னை எப்போதும் ஆண்டு கொள்ளும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிந்த்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 53:7