தியானம் (தை 16, 2024)
அழைப்பின் மேன்மையான நோக்கம்
2 பேதுரு 1:10
உங்கள் அழைப்பையும் தெரிந் துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்;
ஒரு சிறிய கிராமமொன்றிலே இயங்கி வந்த சனசமூக நிலையத்தினால், அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்கு அநேக நன்மைகள் உண் டாயிருந்தது. அந்த வழியாய் செல்லும் மனிதர்கள், கடும் வெயில் நாட் களில், சற்று உட்கார்ந்து, தாகத்திற்கு தண்ணீர் அருந்தி, இளைப் பாறி செல்வதற்கும், மழை நாட் களிலே ஒதுங்குவதற்கும், இரவு நேரங்களிலே, கிராமத்தி லுள்ள மாணவர்கள் சென்று படிப்பதற் கும் வசதியாக அந்த சனசமூக நிலையத்தின் கட்டிடமானது அமைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் அந்த சனசமூக நிலையத் தின் நிர்வாகத்திலிருந்து, சில அனுவல்களை கவனிப்பதற்காக, பட்ட ணம் சென்றிருந்த சிலர், அந்த பட்டணத்திலிருந்த சனசமூக நிலையத் தின் கட்டிட அமைப்பையும், தொழிநுட்ப வளர்ச்சியையும் கண்டு ஆச் சியப்பட்டார்கள். தங்கள் கிராமத்தின் நிலைமையையும், மக்களின் தேவைகளையும் சிந்தித்துப் பார்க்காமல், தாங்களும், குறைந்த பட்ச்சம் சில கம்யூட்டர்களை வாங்க வேண்டும் என்ற ஆசை அவர்கள் உள் ளத்தில் எழுந்தது. அதன்படி சில கம்யூட்டர்களை வாங்கிக் கொண் டார்கள். அவைகளை பாதுகாப்பதற்காக, நிலையத்தின் திறந்த மண் டபத்திற்கு கதவுகளையும், ஜன்னல்களையும் போட்டார்கள். கம்யூட்ட ர்களின் பாதுகாப்பு கருதி, நிலையமானது அதிக நேரம் திறந்து வைக்க முடியாது என்ற தீர்மானத்தை எடுத்துக் கொண்டார்கள். தற்போது, அவ்வழியிலே செல்லும் மக்கள் இளைப்பாற இடம் இல்லை. இரவு நேரங்களிலே மாணவர்கள் சென்று தங்கள் பாடங்களை படிக்க முடி யவில்லை. ஆனால், தொழில்நுட்ப கருவிகளானது, பொருத்தப்பட்டு, உள்ளே பாதுகாப்பாக இருந்து வந்தது. அதனால், சில நிர்வாகிகள் திருப்தியானார்கள் ஆனால் சனசமூக நிலையமானது ஆரம்பித்த நோக் கமானது மாற்றப்பட்டு, மக்கள் அன்றாட தேவைகளை நிறை வேற்ற முடியாமற்போயிற்று. பிரியமானவர்களே, என் தனிப்பட்ட வாழ்வின், குடும்பத்தின், சபையின் பிரதானமான நோக்கம் என்ன? என்ற கேள் வியை ஒவ்வொரும் ஆராய்ந்து அறிய வேண்டும். சில மனிதர்கள் மன தின் ஆசைகளை தங்கள் இருதயத்தின் வாஞ்சை என்று கூறிக் கொள் வார்கள். அந்த வாஞ்சையானது எதுவாக இருந்தாலும், அவை யாவும், நம்மைக் குறித்ததான தேவனுடைய திட்டத்திற்குள் அடங்கியிருக்க வேண் டும்.இல்லாவிடில், அவை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அதனால் உண் டாகும் பிரயோஜனம் அற்பமானவைகளே.
ஜெபம்:
பரம அழைப்பின் பந்தையப் பொருளுக்காக என்னை அழைத்த தேவனே, உம்முடைய மேன்மையான அழைப்பின் நோக்கத்தை ஒரு போதும் மறந்துவிடாதபடிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத் திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கலாத்தியர் 5:24