தியானம் (தை 15, 2024)
பெற்ற நன்மையை காத்துக் கொள்வோமாக
வெளி 3:11
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற் றிக்கொண்டிரு.
ஒரு சபையிலே இருந்த சிலர், 'பாருங்கள் அவர்கள் எத்தனையோ நன்மையான பெரும் செயற்திட்டங்களை செய்து வருகின்றார்கள் அத னால் நாங்களும் அப்படி ஏதாவது செய்ய வேண்டும்' என்றும், இன்னு மொரு சாரார், 'பாருங்கள் இன்னார், சபைக்கு தவறாமல் வந்தாலும் எப்படி உல்லாசமாக வாழ்ந்து வருகின்றார்கள். எனவே, நாங்களும் அப்படி வாழ்ந்துவிட்டு போனால் என்ன?' என்றும் கூறிக் கொண் டார்கள். மற்றவர்களுடைய வாழ் க்கை முறைமைகளே இந்த இர ண்டு சாராருடைய வாழ்வின் தர த்தை மதிப்பிடும் அளவுகோலாக காணப்பட்டது. மற்றவர்களுடைய நன்மையும், தேவனுக்கு பிரியமு மான வழியை நாம் பின்பற்றுவது நல்லது. ஆனால், மற்றவர்கள் நன்மை செய்வதினால், என் பெயரும் அந்தப் பட்டியலில் வரவேண்டும் என்ற எண்ணத்துடன் காரியங்களை செய்யாமல், மனதார நன்மைகளை செய்ய வேண்டும். அதுமட்டுமல் லாமல், நம்முடைய பெலனுக்கு மிஞ்சின காரியங்களை தேவன்தாமே நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. நமக்கு கொடுக்கப்பட்ட பெலனு க்கு தக்கதாக இருக்க வேண்டும். 'உங்களில் எவனானாலும் தன்னை க்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவ னாய் எண்ணவேண்டும். ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இல்லை. பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்ன வெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிற ரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உன க்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான் என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, நாம் எந்த சூழ்நிலையிலும், இயேசுவின் நாமத்தை மறுதலியாமலும், நாம் அறிந்திருக்கின்ற தேவனுடைய வார்த்தையின் வழியிலே நம்மு டைய வாழ்க்கையை நடத்துகின்றவர்களாகவும் நாம் காணப்படு வோமாக.
ஜெபம்:
என்னை பெலப்படுத்துகின்ற தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடத்தில் பெற்றுக் கொண்ட நன்மையை முழு இருதயத்தோடும் காத்துக் கொள்ளும்படிக்கு என்னை நீர் வழிடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 12:3-8