தியானம் (தை 14, 2024)
வளர்ச்சியின் சுட்டிகள்
எபேசியர் 4:11
கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும் வரைக்கும்,
இன்றைய உலகிலே சபைகளின் வளர்ச்சியை மனிதர்கள் எப்படியாக அளவிடுகின்றார்கள். பொதுவாக, சபைக்கு செல்வோரின் எண்ணிக்கை, பொருளாதார வளர்ச்சி, கட்டிடங்கள் மற்றும் சபை உபரகரணங்கள், வெளிநாட்டு ஊழியங்களும் செயற்பாடுகளும் அத்தோடுகூட ஆவி க்குரிய வளர்ச்சி என்பதையும் சேர்த்துக் கொள்கின்றார்கள். இவை யாவும் ஒரு ஸ்தாபனத்தின் வளர்ச்சியின் சுட்டிகளாக காணப்படுகின்றது. சில இடங்களிலே, பரிசுத்த வேதா கமத்தின்படி, பாவங்களை வகைய றுத்து கூறுதல், மனந்திருப்புதல், பாவமன்னிப்பு, கிறிஸ்து வழியாய் மட்டும் உண்டாகும் இரட்சிப்பு, பரி சுத்த வாழ்வு, கிறிஸ்துவின் வருகை, நியாத்தீர்ப்பு, போன்ற சபையின் அடித்தளமான உபதேசங்களை குறி த்து பேசுவதை நிறுத்திக் கொள்கின்றார்கள். ஏனெனில் இந்த உலக த்தின் அளவுகோலின்படி சபையானது வளர்ந்து தன்நிறைவான நிலையை அடைந்திருக்கின்து. பெருந்தொகையான ஜனங்கள் அங்கத்துவம் வகிக்கின்றார்கள். எனவே அந்த நிறைவை காத்துக் கொள்ளும்படி, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்தும்படி பிதாவனாவர் அருளிய சத்திய ஆவியானவரின் கிரியைகளை தணித்து விடுகின்றார்கள். அதனால், அவர்கள் நிர்ப்பாக்கியமுள்ளர்களும், பரிதபிக்கப்படத்தக்கவர்களும், தரி த்திரர்களும்;, குருடர்களும்;, நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், தாங்கள் ஐசுவரியவான்களென்றும், திரவியசம்பன்னர்களென்றும்;, தங்க ளுக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லிக் கொள்கின்றார்கள். சத்திய ஆவியானவர் இல்லாத உள்ளத்திலும், இல்லத்திலும், சபை யிலும், மனிதர்கள் தங்கள் உண்மை நிலைமையை உணராதபடிக்;கு உணர்வற்றுப் போய்விடுகின்றார்கள். பிரியமானவர்களே, நாம் அனை வரும் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசு வாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறை வான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணமான நிலையை அடையும்படி, நாளுக்கு நாள் நம்முடைய உள்ளான மனுஷனானது புதிதாக்கப்பட வேண்டும். அடைந்தாயிற்று என்ற எண்ணத்தை விட்டு விட்டு, பரம பந்தையப் பொருளின் இலக்கை அடையும்வரைக்கும், நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்திலே பொறுமையோடு ஓடக்கடவோம். உலக ஸ்தாபனங்களுக்குரிய வளர்ச்சியில், நிர்விசாரம் அடைந்து போகா தபடிக்கு, பரிசுத்தத்தை தேவ பயத்தோடு காத்துக் கொள்வோமாக.
ஜெபம்:
உம்முடைய திருக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலில் வளரந்து பெருகும்படி என்னை அழைத்த தேவனே, நான் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமலிருக்க என்னை உணர்வுள்ளவனாக்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 16:7-14