புதிய நாளுக்குள்..

தியானம் (தை 13, 2024)

சிறிதாக தோன்றும் குறைகள்

1 தெச 5:19

ஆவியை அவித்துப்போ டாதிருங்கள்.


புதிதாக திருமணமாகிய இளம் தம்பதிகளுடைய வாழ்க்கையிலே, சில மாதங்களுக்கு பின்னர், சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது. ஆனால், கணவனுடைய வியாபரம் பெரிதாக விருத்தியடை ந்ததால், விலையுயர்ந்த வீடுகள், வாகனங்கள்; மற்றும் பொருட்களும், மிகையாக அவர்களிடம் இருந்தது. உல்லாசப் பயணங்களுக்கும், பிரசித்தமான உணவுச்சாலை களிலே விருந்து கொள்வதும் வாழ்க்கையில் வழக்கமாக இருந்து வந்தது. அத னால், அவர்களுக்கிடையிலே இரு ந்த கருத்து முரண்பாடுகள் ஒரு சிறிய பாதகமற்ற மலைப்பாம்பு போலவே இருந்தது. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல அந்த முரண்பாடுகள் வளர்ந்து பெருகி யதால், வாழ் க்கையின் பிரச்சனைகள் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்கு மீறி சென்று விட்டது. அதனால், பெரும் குழப்பங்களும், நஷடங்களும், அவமான வங்களும், பிரிவினைகளும், ஏற்பட்டுவிட்டது. அந்த இளம் தம்பதிகளு டைய வாழ்க்கையைப் போல, இன்று சில மனிதர்கள், உடல் ஆரோக் கியம் நன்றாவே இருக்கின்றது. காலிலே சிறிய கட்டி இருக்கின்றது. அது மிகவும் சிறியதாகவே இருக்கின்றது என்று பாராமுகமாகவிட்டு விட்டு, தங்கள் சரீரத்தின் மற்றய பகுதியிலே உண்டாயிருக்கும் ஆரோக் கியத்தில் அதிக கவனத்தை செலுத்துவருகின்றார்கள். ஆனால் அந்த சிறிய கட்டியானது வளரந்து பெரும் பாதகத்தை தங்களுக்கு ஏற்ப டுத்தலாம் என்பதை உணராமல் வாழ்ந்து விடுகின்றார்கள். பிரியமா னவர்களே, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சபை வாழ்க்கை போன்றவற்றை குறித்து கவனமுள்ளவர் களாக இரு க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, சபையிலே சுவிசேஷ ஊழி யமானது விருத்தியடைந்து கொண்டு செல்கின்றது. ஆனால், அதில் ஈடு படுகின்றவர்களுடைய வாழ்க்கையிலே கீழ்படிவு இல்லா திருக்குமா யின், முதலாவதாக, அவர்கள் தங்கள் கீழ்படியாமையைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருந்து தங்கள் வாழ்வை மாற்றிக் கொள்ள வேண்டும். கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார் க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமா யிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். ஒருவன் அநேகமாயிரம் ஆத் துமாக்களை ஆதாயப்படுத்தி, தன்னுடைய ஆத்து மாவை கெடுத்துக் கொண்டால் அவன் பிரயாசத்தினாலே அவனுக்கு பலன் என்ன? எனவே, உங்கள் இருதயம் உணர்வற்றுப்போகாதபடிக்கு எச்சரிக்கையு ள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

அன்பின் பிதாவே, உம்முடைய வார்த்தைக்கு விரோதமான மாம் சத்தின் கிரியைகளை பாராமுகமாக விட்டுவிடாமல்இ உம் வார்த்தையின்படி என் இருதயத்தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 1:19