தியானம் (தை 10, 2024)
காலங்கள் பதில் சொல்லும்
பிலிப்பியர் 2:16
எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.
ஒரு பண்ணை முதலாளியானவனுக்கு மூன்று குமாரர்கள் இருந்தார்கள். மூத்தவன், தன் தகப்பனானவர், பண்ணையிலே தனக்கு கொடுத்த சில வேலைகளை பொறுப்போடு செய்து வந்தான். ஒரு நாள், அவன் செய்ய வேண்டிய ஒரு காரியத்தை செய்யாது போனதினாலே, பண்ணை யிலே இருந்த சில ஆடுகள் நோயுற்று சோர்ந்து போயிருந்ததை கண்ட தகப்பனானவர், அவனை அழைத்து, அவனை கடிந்து கொண்டு அறிவுரை கூறினார். தப்பனானவ ரின் வாரத்தைகளை கேட்ட மூத்த குமாரனானவன் மனம் வருந்தி தன் தகப்பனானவரிடம் மன்னிப் புக் கேட்டுக் கொண்டான். அதை கேட்டுக் கொண்டிருந்த அவரு டைய குமார்களில் இளையவன் அவரை நோக்கி: அந்த வேலைகளில் சிலவற்றை எனக்கு கொடுத்தால் அவைகளை அண்ணனைவிட நான் திறம்பட செய்து முடிப்பேன் என்று தன் தகப்பனானவரிடம் கூறிக் கொண்டான். அதை கேட்டு கோபம டைந்த தகப்பனானவர், அவனை நோக்கி: உன் பள்ளிக்கூடத்திலே, ஆசிரியர் கொடுக்கும் வீட்டு வேலைகளை நீ ஒழுங்காக செய்யாமல், ஆசிரியர்களை குறித்து குறை கூறிக் கொள்கின்றாய். உன் அம்மா, உனக்கு சொல்லும் வேலைகளை முறுமுறுப்போடு செய்து வருகின் றாய். முதலாவதாக, நீ உனக்கு கொடுக்கப்பட்ட சின்ன வேலைகளிலே கருத்தாய் இரு. உன் அண்ணனின்; வேலையில் இருக்கும் சவால்களை ஒன்றையும் நீ இப்போது அறியமாட்டாய். எனவே, பெரிய ஆசன ங்களில் அமர்வதற்கு முன்னதாக, அவற்றைக்குறித்து விமர்சிக்காதே என்று அவனை கடிந்து கொண்டார். பொதுவாக, தொழிற்சாலைகளிலே, உழைப்பாளிகள் தங்கள் தலைவர்களை குறித்து விமர்சித்துக் கொள் வார்கள். தாங்கள் தலைவரானால், எல்லாம் திறம்பட செய்வோம் என்று திட்டமாக கூறிக் கொள்வார்கள். இவ்வண்ணமாகவே, இன்று சபைக ளிலும், சில சிறியவர்கள், பெரியவர்கள் மற்றவர்களுடைய பொறுப்பு க்களை குறித்து விமர்சிப்பதிலே அதிக கவனமுள்ளவர்களாக இருக்கி ன்றார்கள். எப்படி ஒரு நல்ல தந்தை இருக்க வேண்டும் என்று ஒரு வாலிபனானவன் பல குறிப்புக்களை அழகாக வர்ணித்து கூறிக் கொள் ளலாம், ஆனால் அவன் ஒரு நாள் தகப்பனாக வரும்வரைக்கும் அவன் கூறிய வார்த்தைகளின் தார்ப்பரியத்தை அறியாதவனாகவே இருப்பான். எனவே, தற்போறு உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை முறுமுறுப்பில்லாமல் நிறைவேற்றுங்கள்.
ஜெபம்:
அன்பின் தேவனே, நான் என்னைக் குறித்து அதிக மேன்மையாக எண்ணாமலும், என் கண்ணிலிருக்கும் உத்திரத்தை உணராதவன் போல, நான் வாழாதபடிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:4