புதிய நாளுக்குள்..

தியானம் (தை 09, 2024)

சிறிய பொறுப்புக்கள்

1 தீமோத்தேயு 1:12

என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக் கிறேன்.


ஒரு தேசத்திலே இருந்த குறிப்பிட்ட ஊரிலே வாழ்ந்து வந்த ஜனங்கள் மத்தியிலே அநியாயங்களும் அக்கிரமங்களும் பெருகிக் கொண்டிருந் தது. அந்த ஊரின் அதிகாரங்களையும், ஆட்சியையும் குறித்த நம்பிக்கை யிழந்து போன ஜனங்களில் பலர், அந்த ஊரைவிட்டே வெளியேறிக் கொண்டார்கள். அந்த ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனானவனொருவன், பல ஆண்டுகளாக, குறிப்பிட்ட சில தெருக்களை சுத்தப்படுத்தி பராம ரிக்கும் வேலையை செய்து வந் தான். அவ்வூரிலே வாழ்ந்த ஜன ங்களில் பலர், தங்கள் தங்கள் வழிகளை தெரிந்து கொண்டு, தங் களுக்கு கொடுக்கப்பட்ட பொறு ப்புகளை தாங்கள் நிறைவேற்றா மல் இருப்பதை நியாயப்படுத்து வதற்கு பல காரணங்களை சுட் டிக் காட்டி, தங்கள் வேலைகளை ஏனோ தனோவென்று செய்து வந்த போதிலும், அந்த மனிதனானவ னோ, சூழ்நிலைகளைக் கண்டு மனம் தளர்ந்து போகாமல், தனக்கு கொ டுக்கப்பட்ட சிறிய பொறுப்பை நிறைவேற்றுவதிலே கண்ணும் கருத்து மாக இருந்து, தன் வேலையை ஒழுங்காக செய்து வந்ததை, அந்த ஊரார் கண்டு, அவனுடைய அர்ப்பணிப்பை குறித்து ஆச்சரியப்பட்டா ர்கள். அந்த தேசத்தின் ராஜாவானவர், குறிப்பிட்ட அந்த ஊரிலே வாழ் ந்து வந்த, பொறுப்புள்ள அந்த எளிமையான ஊழியனை சந்திக்கும் போது, அவனை நிச்சயமாகவே மெச்சிக் கொள்வார் அல்லவா. இன் றைய உலகிலே நமக்கு கொடுக்கப்பட்ட சிறிய பொறுப்புக்ளை நிறை வேற்றமால் இருப்பதற்கு பல காரணங்களை சுட்டிக் காட்டலாம். மனிதர் கள் மத்தியிலே நம்முடைய கருத்துக்களை நியாயப்படுத்தலாம். அவ ற்றை ஆதரிக்க நம் சார்ப்பில் சில மனிதர்களும் இணைந்து கொள்ள லாம். ஆனால், நம்முடைய இருதயங்களை ஆராய்ந்து, நம் நினைவுக ளை அறிந்த தேவன் முன்னிலையில் நாம் எந்த நியாயத்தை கூறிக் கொள்ள முடியும்? 'நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்கார னே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதி காரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி' என்ற நம்முடைய எஜமானனாகிய இயேசுவின் வார்த்தையை கேட்கு ம்படிக்கு, நாம் நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை, கருத்தோடு நிறைவேற்ற பிரயாசப் படுவோமாக. பரிசுத்த ஆவியானவர் தாமே வேண்டிய பெலத்தை தந்து வழிநடத்துவாராக.

ஜெபம்:

காருண்யத்தினாலே என்னை உம்மண்டை இழுத்துக் கொண்ட தேவனே, கோணலும், மாறுபாடானதுமான உலகிலே, நீர் எனக்கு தந்த பொறுப்பை நான் நிறைவேற்றி முடிக்க என்னை பெலப்படுத்தி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:21