புதிய நாளுக்குள்..

தியானம் (தை 08, 2024)

மேலானவைகளை இழந்துவிடாதிருங்கள்

எபேசியர் 4:1

நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த தாயானவள், இளம் வயதிலேயே தன் கணவனை இழந்த நிலையிலே, பல நெருக்கடிகள் மத்தியிலே தன் ஒரே மகனானவனை வளர்த்து வந்தாள். தன்னால் முடிந்த அளவிற்கு, தன் மகனானவன் கல்வி கற்பதற்கு வேண்டிய வசதிகள் யாவற்றையும் செய்து கொடுத்தாள். மகனானவனும், நன்றாக கற்று, தன் பட்டப்ப டிப்பை அதி விசேஷட சித்தியுடன் முடித்தான். சில ஆண்டுகள் கடந்த பின்பு, தூர தேசத்திற்கு சென்று மிகையாக உழைத்து, செழிப்பாக வாழ்வதற்கு, அவனுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத் தது. அதை அறிந்த தாயானவள்: மகனே, நீ அந்த சந்தர்ப்பத்தை விட்டுவிடாதே, நீ அங்கு சென்று சுகமாய் இரு என்று வாழ்த்தினாள். ஆனால் மகனானவனோ: அப்படி அல்ல அம்மா, அநேக ஆண்டுகள் எனக்காக நீங்கள் வாழ்ந்து வந்தீர்கள், இப்போது உங்களுக்கு தனியே வாழ முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. நான் அங்கு சென்றால், ஒருவேளை அந்த நாட்டின் போக்கிற்கு பழக்கமுற்று விடுவேன். தூர தேசத்திற்கு சென்று, அதிக பணத்தை உங்களுக்கு அனுப்புவதைவிட, தற்போது உள்ள வேலை யோடு, நான் உங்களோடு இருப்பதையே விரும்புகின்றேன். வருங்கா லங்களில் சந்தர்ப்பம் ஏற்படும் போது, நாம் இருவருமாகவே அங்கே செல் வோம் என்று பதில் கூறினான். பிரியமானவர்களே, இன்றைய உல கிலே, வசதியை தேடி ஓடுவது மனிதர்கள் மத்தியிலே பரவலாக காணப்படுகின்றது. சிலர், அந்த வசதியை பெற்றுக் கொள்வதற்காக தங்கள் வாழ்வில் எதையும் இழந்துவிட ஆயத்தமுள்ளவர்களாக இருக் கின்றார்கள். சில வேளைகளிலே அவர்களை நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்பையும் அற்பமாக எண்ணிவிடுகின்றார்கள். இன்று இத்தகைய செயல்கள் விசுவாசிகள் மத்தியிலும் நடைபெறுவதை நாம் காண க்கூடியதாக இருக்கின்றது. இதனால், சிலர் தேவனாகிய கர்த்தர் அவர் களுக்கு கொடுத்த அருமையான சந்தர்ப்பங்களையும் அற்பமாக எண் ணிவிடுகின்றார்கள். வாழ்க்கையிலே முன்னேற்றங்களை நாடி செல்ல வேண்டிய நிலைகள் ஏற்படுவதுண்டு. ஆனால், ஏவாள், தன் கண்களின் இச்சையினாலே, தேவவார்த்தைக்கு கீழ்ப்படியாமல், தங்களுக்கு தேவன் கொடுத்த நித்திய மகிமையை இழந்து போனார்கள். அதுபோலவே, நம் முடைய வாழ்விலே தேவன் கொடுத்திருக்கும் மேன்மையானவைகளை இழந்து போகதாபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருப்போமாக.

ஜெபம்:

உண்மையுள்ளவனென்று கருதி என்னை அழைத்த தேவனே, நீர் எனக்கு கொடுத்த மேன்மைகளை உணராமற்போகும்படி என் மனக் கண்கள் குருடாகாதபடிக்கு என்னை நீர் காத்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தீமோ 1:12