தியானம் (தை 06, 2024)
நம்முடைய பிரயாசங்கள்
1 கொரிந்தியர் 15:19
இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
பொதுவாக மனிதர்கள் பிரயாசங்களையும், ஆசீர்வாதங்களையும் குறித்து பேசும் போது, பொருளாதார செழிப்பைக் குறித்தே எண்ணமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட பேச்சுக்கள் விசுவாசிகள் மத்தியிலும் காணப்படுகின்றது. ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திலே இருந்த நாட்களிலே, அவருடைய சீஷர்களில் சிலர், இராமுழுவதும் மீன்களை பிடிப்பதற்கு பிராயசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை. மறுநாள் காலையிலே, ஆண்டவ ராகிய இயேசுதாமே வலைகளை மறுபடியும் போடும்படி கூறினார். அப்பொழுது வலைகள் கிழிந்து போகத்தக்கதாக திரளான மீன்கள் பிடிக்கப்பட்டிரந்ததைக் குறித்து நாம் நேற்றய தியானத்திலும் பார்த்தோம். இப்படியான சம்பவமானது இரண்டு தடவைகள் நடை பெற்றதாக வேதத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு தாமே சீஷர்கள் எப்படி மீன்பிடிப்ப வேண்டும் என்றும், தங்கள் வியாபாரத்தை எப்படி விஸ்தாரப்படுத்துவதென்றும் காண்பிப்பதற்காகவா இந்த உலகத்திற்கு வந்தார்? இல்லை, தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, வழி யை ஏற்படுத்தும்படிக்கே அவர் இந்த உலகத்திற்கு வந்தார். அவரு டைய திருப்பணியின் ஆரம்ப நாட்களிலே, இயேசு கலிலேயாக் கட லோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். தேவனுடைய ஜீவ வார்த்தைகளை, தேவ பிள்ளைகளாகிய நாம் இந்த உலகத்தின் அழிந்து போகும் செழிப்பின் உபதேசதுக்கேதுவாக மாற்றாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு தாமே இன்றும் அற்புதங்கள் செய்கின்றார். அவைகளால் உண்டாகும் நன்மைகள் மேலானவைகளே. நாமோ, இந்த உலகத்தின்; ஆசீர்வாதங்களைப் பற்றிக் கொள்ளாமல், அவரையே இன்னும் இறுகப்பற்றிக் கொள்கின்றவர்களாக காணப்பட வேண்டும். நித்திய வாழ்வு தரும் வசனங்கள் அவரிடமே உண்டு. நம் பிரயாசஙக்ள் யாவும் அழியாத பரலோக ராஜ்யத் தைக் குறித்த மேலானமைகளாகவே இருக்க வேண்டும்.
ஜெபம்:
பரலோகத்தின் அழியாத பொக்கிஷங்களை தேடுங்கள் என்று கூறிய தேவனே, நித்திய வாழ்வு தரும் உம்முடைய ஜீவனுள்ள வார்த்தைகளின் மேன்மையை நான் உணர்ந்து கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கொலோ 3:1