புதிய நாளுக்குள்..

தியானம் (தை 05, 2024)

கர்த்தருடைய வேளைக்காக காத்திருங்கள்

ரோமர் 4:17

இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக


நான் யாருக்கும் தீமை செய்ததில்லை. நான் அறிய ஒரு அநியாயமும் செய்ததில்லை. அப்படியிருந்தும் ஏன், என்னுடைய வாழ்க்கையிலே என் உழைப்பின் பிரயாசத்தை காணமுடியவில்லை என்று ஒரு விசுவாசி யானவன் நொந்து கொண்டான். இத்தகைய அனுபவங்களை நீங்கள் எதிர்நோக்கியிருக்கலாம் அல்லது வருங்காலங்களிலே எதிர்நோக்கும் சந்தர்ப்பங்கள் நேரிடலாம். ஒரு சமயம், ஆண் டவராகிய இயேசு போதகம் பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடு ங்கள் என்றார். அதற்குச் சீமோன் பேதுரு: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை. ஆகிலும் உம்மு டைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப் படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, சில வேளை களிலே விசுவாசிகளாகிய நாமும் நீதியான முறையிலே பிரயாசப்பட்டும் பலனை காணது போகும் போது, சோர்வடைந்து விடுகின்றோம். அப்ப டிப்பட்ட வேளைகளிலே, சோர்ந்து போகாமல், பெலவீனத்திலே விசுவாசத்திற்கு விரோதமான வார்த்தைகளை அறிக்கையிடாமல், கர்த்தரு டைய பாதத்திலே பொறுமையோடு அவருடைய வேளைக்காக காத்திருங்க வேண்டும். இந்த உலகத்தின் போக்கிலே வாழ்பவர்கள் பலவித மான யுத்திகளை கையாளுகின்றார்கள். அவை யாவும் தவறானவைகள் என்று கூறிவிடமுடியாது. எல்லா காலமும், பருவமும், நேரமும், வழிகளும் அவர்களுக்கு ஏற்புடையதாயிருக்கும் ஆனால் 'நீங்கள் உங்களு டையவர்களல்லவென்றும் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள் என்பதையும் அறியீர்களா' . கர்த்தர் தம்முடையவர்களை அறிவார். அவர் தம்முடையவர்களுக்கென்று ஒரு வழியை ஆயத்தப்படுத்தியிருக்கின்றார். அவருடைய வேளை வரும் போது, அவர் காரியங்களை செம்மையாகவும் சிறப்பாகவும் செய்து முடிக்கின்றவராயிருக்கின்றார். நம்முடைய பரம பிதாவானவர், தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மைகளை கொடுக்கவும், அவைகள் கொடுக்கப்பட வேண்டிய வேளையையும் அறிந்திருக்கின்றார். எனவே, அவருடைய வேளைக்காக காத்திருங்கள்.

ஜெபம்:

இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கின்ற தேவனே, என்னுடைய தேவைகளை முன்அறிந்து, ஏற்ற வேளையிலே யாவற்றையும் செய்து முடிக்கின்ற உம்முடைய தயவிற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிரசங்கி 3:11