தியானம் (தை 04, 2024)
யாரோடு உங்கள் போராட்டம்?
யாக்கோபு 4:7
பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
மல்யுத்தத்திலே நன்றாக பயிற்றுவிக்கப்பட்டு, தேர்ச்சியடைந்த வீரனானவனொருவன், தேசிய மல்யுத்த பந்தைய போட்டியிலே முதலிடம் பெற்று, மிகவும் பிரபல்யமானவனாக இருந்து வந்தான். ஒரு நாள் அவனுடைய சகோதரனானவன் குடித்து வெறிகொண்டவனாக வீடு திரும்பினான். அதைக் கண்ட அந்த வீரனானவன், தன் சகோதரனை நோக்கி: நீ ஏன் இப்படி உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கின்றாய் என்று அவனுக்கு புத்திமதி கூறினான். வெறிகொண்டவனோ, கோபம் மூண்டவனாக, மல்யுத்த வீரனாகிய தன் சகோதரனை நோக்கி: நீ யார் எனக்கு புத்தி மதி கூற, என்று அவனை அடிக் கும்படியாக சென்றான். அந்த மல்யுத்த வீரனோ, அவனை மறித்து, தடுத்து நிறுதித்தி விட்டு, கலக மேதுமின்று அவ்விடத்தைவிட்டுச் சென்றான். அவனுடைய நண்பன், அவனை நோக்கி: நீ ஏன் அவனை விட்டு வைத்தாய், நீ மல்யுத்த வீர னல்லவோ என்று கேட்டான். அதற்கு அவன் மறுமொழியாக: நண்பா, மல்யுத்தப் போட்டி, என்னை எதிர்த்து போராடும் என் எதிரிகளோடு மட்டுமே, என் சகோதரனோடு அல்ல. அதுமட்டுமல்ல, அவன் வெறி கொண்டு, தான் செய்வது இன்னது என்று உணராதிருக்கின்றான் என்று கூறினான். சேனைகளின் கர்த்தராகிய இயேசுவின் போர்சேவகர்களாக அழைப்பை பெற்ற சகோதர சகோதரிகளே, நம்முடைய யுத்தம் யாரோடு என்பதை குறித்து மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். 'ஏனெ னில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதி காரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.' சர்வ வல்லவராக, பரலோகத்திலே வாசம் செய்த, கர்த்தரானவர், தாழ்மைக் கோலமெடுத்து, இந்த பூவுலகிற்கு வந் தார். 'அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்' அப்படியி ரு ந்தும், பரியாசம்பண்ணப்பட்டு, அடிக்கப்பட்டு, துன்புறுத்தப்படும் போதும், சர்வ வல்லவரான இயேசு நிந்தையையும், அவமானத்தையும் சகித்துக் கொண்டு, பிதாவானவரின் திருசித்தம் தன்னில் நிறைவேறும்படிக்கு மௌ னமாக இருந்தார். பிரியமானவர்களே, ஒருவன் தேவனுடைய வார்த்தை க்கு எதிர்த்து நிற்கின்றவானாக இருந்தால், அவன் யாருக்கு ஊழியம் செய் பவனாக இருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள். மற்ற யவர்களுடைய குறைவிலே உங்கள் ஆவியின் நிறைவை வெளிக்காட் டுங்கள். தேவனுக்கு கீழ்படிந்திருங்கள். பிசாசானவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்.
ஜெபம்:
நீடிய பொறுமையுள்ள தேவனே, எந்த சூழ்நிலையிலும் நான் மாம்ச இச்சைக்கு இடங்கொடுத்து, கலகங்களை ஏற்படுத்தாதபடிக்கு உம் வார்த்தையின்படி சூழ்நிலைகளை மேற்கொள்ள என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கலாத்தியர் 5:15