புதிய நாளுக்குள்..

தியானம் (தை 03, 2024)

தேவ சித்தம் நிறைவேற இடங்கொடுங்கள்

எபிரெயர் 10:36

நீங்கள் தேவனுடைய சித்தத் தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங் களுக்கு வேண்டியதாயிருக்கிறது.


பேச்சுப் போட்டிகளிலும், பட்டிமன்றங்களிலேயும் விவாதம் செய்வதிலும் சிறந்து விளங்கிய மனிதனானவனொருவன், தன் ஊரிலுள்ள சனசமூக நிலையமொன்றிலே இணைந்து கொண்டான். சில மாதங்களின் பின்னர், அந்த சனசமூக நிலையத்தின் உறுப்பினர்கள், 'இவன் பொறுத்த கேள் விகளை கேட்பதிலே மிகவும் சமார்த்தியமுள்ளவன், எனவே இவனை நாங்கள் நிலையத்தின் நிர்வாக உறுப்பினராக தெரிந்து கொள்ள வேண்டும்' என்று தங்களுக்குள்ளே பேசி, அந்த ஆண்டில் நிர்வாக தேர்தலிலே அவனுக்கு வாக்களித்து அவனைத் தெரிந்து கொண் டார்கள். தான் எதிர்வாதம் பேசிவதில் வல்லவன் என்ற எண் ணமும், மக்களின் எதிர்பார்ப்பை தான் எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்ற வித்தும் அவன் இருயத்திலே விழுந்து முளைக்க ஆரம்பித்தது. அதனால், பல ஆண்டு காலமாக, சனசமூக நிலையத்தில் சீராக நடந்த வந்த கூட்டங்களிலே அநேக குழப்பங்களும், எதிர்வாதங்களும் ஏற்பட்டது. அந்த மனிதனானவன் பட்டிமன்றங்களுக்கு ஏற்றவன் என்பது உண்மை, ஆனால் ஊரின் நலனுக்கான காரியங்களை நிறைவேற்றி முடி பதிலோ, பெரும் இடறல் கல்லாக, தான் இருக்கின்றேன் என்பதை அவன் உணராமல் வாழ்ந்து வந்தான். நித்திய ஜீவனுக்கென்று அழைப்பை பெற்ற சகோதர சகோதரிகளே, அந்த மனிதனானவன் தன்னிடமிருந்த திற மையை, தன் சொந்த எண்ணங்களையும், ஊர் மக்கள்; தன்னை குறித்து வைத்த அபிப்பிராயத்தையும் நிறைவேற்றும்படியாக உபயோகித்தானே தவிர, நல்ல காரியங்களுக்காக அதை உபயோகிக்கவில்லை. இன்று சபைகளிலும், இப்படியான சில மனிதர்கள், ஒரு சில கலகக்காரின் உந்துதலினால், தாங்கள் யாருக்கும் பயப்படாத வீரர்கள் என்ற பிரகாரம் கர்த்தருடைய சபையிலே நடந்து கொள்கின்றார்கள். இப்படிப்ப ட்டவர்கள், தங்கள் சொந்த இச்சைகளை நிறைவேற்றி, தங்களுக்கு ஆதரவானவர்களின் சித்தப்படி வாழ்ந்து வருகின்றார்கள். நாமோ அப்படியிருக்கலாகாது, நாம் உன்னதமான அழைப்பை பெற்றிருக்கின்றோம். பிதவாகிய தேவ னுடைய சித்தமானது பரலோகத்திலே செய்யப்படுவது போல, இந்த பூவுலகத்திலும் செய்யப்படும்படியாக நாம் தெரிந்து கொள்ளப்பட்டிருக் கின்றோம். எனவே, நாம் நம்முடைய சொந்த எண்ணங்களுக்கும், மற் றவர்களின் தவறான உந்துதலுக்கும் இடங் கொடாமல், தேவ வார்த்தை நம்மிலே நிறைவேற இடங் கொடுப்போமாக.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, நீர் வாக்குத்தத்தம் பண்ணினதை நான் பெற்றுக் கொள்வதையே என் இலக்காக வைத்து, உம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் உறுதியாய் நிலைத்திருக்க பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 9:13