புதிய நாளுக்குள்..

தியானம் (தை 02, 2024)

தவறிப்போன இடங்கள்

நீதிமொழிகள் 6:23

கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி.


ஒரு கிராமத்திலே வசித்து வந்த குடியானவன், வாரந்தோறும் அதி காலையிலே இருட்டோடு எழுந்து, தன் தோட்டத்தின் காய்கறிகளை தன் மாட்டு வண்டிலிலே ஏற்றிக் கொண்டு, சந்தைக்கு செல்வது வழக்கமாக இருந்தது. சந்தை க்கு செல்லும் வழியானது சீரற் றதும், பள்ளந்திட்டியுமானதும், வனவிலங்குகளின் நடமாட்டமு ள்ளதாகவும் இருந்தது. மழை நாட் களிலே, அங்காங்கே சேறும் சகதியுமாக காணப்படும். அத னால், அவனுன் செல்லும் வண்டிலின் சில்லானது, பள் ளங்களிலே அகப்பட்டு விடுவதுண்டு. அவன் கொண்டு செல்லும் சில காய்கறிகளும் அநேனமாக வழியிலே விழுந்து விடும். அதுமட்டுமல்லாமல், அந்த நேர த்திலே அவனுக்கு உதவி செய்வதற்கு அங்கே யாரும் இல்லா திருந்த தினாலும், அவன் நேரம் தாழ்த்தி சந்தைக்கு செல்வதாலும், அவனு டைய பிரயாசத்தின் பலன் மிகவும் அற்பமாகவே இருந்தது. ஒரு நாள் அவனுடைய நண்பனானவன், அவனுடைய நிலைமையை அறிந்து, அவன் வண்டிலிலே போடுவதற்கு ஒரு விளக்கை வாங்கிக் கொடுத் தான். அந்த விளக்கின் வெளிச்சத்தினாலே அவன் வண்டிலானது பாதை யிலே இடறாதபடிக்கு, ஒழுங்காக ஓட்டிச் சென்றான். ஆம், பிரியமானவர்களே, இந்த கோணலும் மாறுபாடானதுமான உலகத்திலே, நிலை யான பரலோகத்தை நாடி நாம் சென்று கொண்டிருக்கின்றோம். இந்த உலகத்திலே இருள் சூழ்ந்திருந்திருக்கின்றது. அதனால், நாம் இடறி விழுவதற்கு சந்தர்ப்பங்கள் அநேகமுண்டு. கடந்த ஆண்டிலே நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்து, நாம் தவறிய இடங்களை ஆராய்ந்தறிய வேண்டும். விழுந்த இடத்திலிருந்து நாம் எழுந்திருக்க வேண்டும். நாம் கர்த்தருடைய வேதத்தை கைக்கொள்ள தவிறிய இடங்களே நாம் இடறி விழுந்த இடங்கள். 'பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற, தேவன் முன்னுரைத்துக் கூறிய, வார் த்தைகளை கவனித்திருப்பது நலமாயிருக்கும்.' கிராமத்திலே வசித்து வந்த அந்தக் குடியானவனின் பிரயாசம் பெரிது. அவனுடைய செயற்பாடுகளில் தவறேதும் இருக்கவில்லை. அவன் நோக்கம் சிறப்பானது ஆனா லும், பாதையிலே கிடக்கும் பாதகங்களை கண்டறிய அவனுக்கு விளக்கு தேவைப்பட்டது. கர்த்தருடைய வசனமே நம் கால்களுக்குத் தீப மும், நாம் செல்லும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. அவை களை கைகொள்ளுகின்றவர்களுக்கோ மிகுந்த பலன் உண்டு.

ஜெபம்:

வழிகாட்டும் தீபமான ஜீவ வசனங்களை எனக்கு தந்த தேவனே, நான் என் சுய அறிவினாலே காரியங்களை முன்னெடுத்துச் செல்லாமல், உம் வார்த்தையின் வழியிலே வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:7