புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 30, 2023)

நம்மோடுகூட இருக்கின்றார்

மத்தேயு 28:20

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.


இந்தப் பூவுலகிலே இன்னுமொரு ஆண்டின் முடிவின் நாட்களுக்குள் நாம் வந்திருக்கின்றோம். நிச்சயமாக நாம் யாவரும் பலவிதமான சவால்களை இந்த ஆண்டிலே கடந்து வந்திருப்போம். நம்முடைய பார்வையிலே, நாம் நினைத்த சில காரியங்கள் கைகூடி வந்திருக்கலாம், வேறு சில தாமதித்திருக்கலாம். இன்னும் சில நாம் நினைத்தத்திற்கு எதிராக நடந்து முடிந்திருக்கலாம். நாம் நம்முடைய மட்டுப்படுத்தப்பட்ட அறிவுக்கு எட்டியபடி நம் வாழ்வின் வெற்றியையும் தோல்வியையும் வகுத்துக் கொள்கின் றோம். ஒரு வேளை துன்பங்கள், துயரங்களி னால் மனம் சோர்ந்து போன நாட் களை நீங்கள் கடந்து வந்திருக்க லாம். அவைகள் மத்தியிலே ஆண்டவராகிய இயேசு உங்களோடு இருந்தாரோ அல்லது உங் களை மற ந்து போனாரோ? என்று நீங்கள் சிந்தித்த நாட்கள் உண்டாயிருக்கலாம். ஒரு சமயம் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள், கர்த்தர் எங்களைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லிக் கொண்டார்கள். கர்த்தர் அவர்களை நோக்கி: ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? ஆவ ர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ள ங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது என்று கூறினார். சில வேளைகளிலே நாம் அறி ந்தோ அறியாமலோ, பெலவீனமான நாட்களிலே, விசுவாசத்திற்குவி ரோ தமான காரியங்களை அறிக்கையிட்டுவிடுகின்றோம். நம்மில் அன் புகூர்ந்த தேவனானவர், நம்முடைய பெலவீனத்திற்காக நம்மை தண்டிக் கின்றவர் அல்லர். ஏனெனில், நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவரா யிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். இந்நாள் வரைக்கும் அவர் அவ்வண் ணமாகவே இருந்து வந்தார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறா தவராகவே இருக்கின்றார். எனவே, நம்முடைய பாவங்களுக்குத்த க்கதாக நமக்கு செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குதக் கதாக நமக்கு சரிக்கட்டாமலும் இருக்கின்ற தேவனாகிய கர்த்தராகிய ஸ்தோ த்திரப் பலிகளை ஏறெடுப்போம். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிரு பையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.

ஜெபம்:

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல எனக்கு இரங்குகின்ற கர்த்தாவே, நீர் உமது விருப்பம் போல என்னை நடத்தி முடிவிலே மகிமையிலே ஏற்றுக் கொள்வதற்காக உமக்கு நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 49:15-16