புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 28, 2023)

முதன்மையானது எது?

பிரசங்கி 4:6

வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறை யக் கொண்டிருப்பதே நலம்.


'உங்கள் சந்ததி இந்த உலகிலே கஷ;டங்களை சகித்து, நித்திய ஜீவனை அடையலாம் அல்லது இந்த உலகிலே சுகபோகமாக வாழ் ந்து நித்திய ஜீவனை இழந்து போகலாம்' என்று இரண்டு தெரிவுகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டால், நீங்கள் எதைத் உண்மையாக தெரிந்து கொள்வீர்கள்? இந்த உலகிலே அடிப்படைத் தேவைகளை சந்திப்ப தற்கு இன்று கல்வி அவசியமான தொன்றாக காணப்படுகின்றது. ஆனால், எவ்வளவாய் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து ஒரு விசுவாசியானவன் கருத்துள்ளவனாய் இருக்க வேண்டும். இந்த உலகத்தின் காரியங்களில் தேவையானவைகளை மட் டும் அளவாய் எடுத்துக் கொண்டு, பரம பந்தையப்பொருளின் இலக்காகிய நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளும்படி ஆர்வத்தோடு முன்னேற வேண்டும். ஏனெனில், ஒருவன் இந்த உலகத்தின் காரியங்களிலே இச்சை கொள்வானாக இருந்தால், அவன் இருதயத்தில் அந்த இச்சையாக பெருக ஆரம்பிக்கும். அதுவே, அவனை தேவனிடமிருந்து தூரப்படுத்தும், கண்ணியாக அவனுக்கு மாறிவிடுகின்றது. பிள்ளைகள் கற்க வேண்டும், நல்ல உத்தியோகத்திலே அமர்ந்து பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்காமல் வாழ வேண்டும் வேண்டும் என்பதை பெற்றோர்கள் விரும்புகின்றார்கள். அந்த நோக்கத்தில் தவறு இல்லை. ஆனால், வாழ்க்கையில் முதன்மையானதும் அவசியமானது எதுவென்பதையும் நாம் முதலாவதாக உணர்ந்து அதை பற்றிக் கொள்ள வேண்டும். பின்பு, அதை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து, அதன்படிக்கு, கர்த்தரை தேடுகின்ற காரியங்களை அவர்கள் வாழ்வில் முதன்மைப்படுத்தி, அவர்களை கர்த்தருடைய வழியிலே நடப்பிக்க வேண்டும். அவனவன் தன் தன் சுயஇச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். எனவே, இந்த உலகத்தின் காரியங்கள் பிள்ளைகளின் வாழ்வில் இச்சையாக மாறாதபடிக்கு நாம் கருத்துள்ளவர்களாக இருக்க வேண்டும். மனிதர்கள் ஏன் கல்வியை மேன்மைப் படுத்துகின்றார்கள்? ஏனெ னில், நல்ல வேலையை எடுக்க வேண்டும். கைநிறைய உழைக்க வேண்டும் என்பதே கல்வியின் பிரதானமான நோக்கமாக இருக்கின்றது. பண ஆசையானது, பிள்ளைகளின் மனதிலே உருவாகாதபடிக்கு நாம் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏனனெனில், பண ஆசையா னது எல்லாத் தீமைக்கும் வேராக மாறிவிடுகின்றது.

ஜெபம்:

நாளைய தினத்தைக் குறித்து கவலையடையாதே என்று கூறிய தேவனே, நான் எப்போதும் பரம பந்தையப் பொருளாகிய இலக்கையே முதன்மையாக கொண்டிருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:22