புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 27, 2023)

அருமையான சந்தர்ப்பங்கள்

ரோமர் 12:2

நீங்கள் இந்தப் பிரபஞ்சத் திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,


தங்களுடைய ஒரே மகனானவனை, படித்து ஆளாக்க வேண்டும் என்ற நிச்சயத்தோடு, தாங்கள் சிறுமையிலும் பட்டினியிலும் கடினமாக உழைத்து, அவனை ஊரிலுள்ள சிறந்த பாடசாலையில் சேர்த்து, அவன் கல்விக்கு வேண்டிய வசதிகள் யாவற்றையும் செய்து கொடுத்தார்கள். அவன் படித்து பட்டம் பெற்று, ஊரிலே ஒரு நல்ல கம்பனியிலே வேலை பார்;த்து வந்தான். சில வருடங்களுக்கு பின்னர், நாட்டின் மறுபகுதிலுள்ள பட்டணமொன்றிலிருந்த உலக பிரசித்தி பெற்ற கம்பனியில் பதவியுயர்வுடன், உயர்ந்த சம்பளமும், பல சலுகைகளுடனுமான வேலைக்கு அழைப்பு வந்தது. அதைக் குறித்து தன் மனதிலே சில நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்தான். பின்னர், தான் அந்த வேலையை எடுக்கப்போவதில்லை என்று, அந்த கம்பனியின் உபதலைவருக்கு நன்றியை செலுத்தி, மறுமொழியை அனுப்பி வைத்தான். அவனுடைய பெற்றோர் அவனை நோக்கி: மகனே, ஏன் இப்படியான நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டாய் என்று கேட்டா ர்கள். அதற்கு அவன், உங்கள் வாழ்க்கையின் பெலனுள்ள காலம் முழுவதும், நான் வாழ வேண்டும் என்று எனக்காக அர்ப்பணித்தீர்கள். இப்போது, நீங்கள் பெலனற்று இருக்கின்ற காலத்திலே நான் உங்களோடு இருந்து, உங்களை பார்த்துக் கொள்வதே என்னுடைய அருமையான சந்தர்ப்பம் என்று கூறினான். அதைக் கேட்ட பெற்றோர், ஆனந்த கண்ணீரோடு, மனதிலே தங்கள் மகனானவனைக் குறித்து பெரும் மகிழ்ச்சியடைந்தார்கள். பிரியமானவர்களே, இன்று மனிதர்கள், கல்வி, வேலை, ஆஸ்தி, அந்தஸ்து இவைகளையே அருமையான சந்தர்ப்பங்கள் என்று கருதி, வாழ்வின் கருப்பொருளை உணரமுடியா மல் வாழ்கின்றார்கள். அவர்களோடுகூட சில தேவ பிள்ளைகளும், தேவன் தங்களுக்கு கொடுத்திருக்கும் அருமையான சந்தர்ப்பங்களை உதறி தள்ளிவிட்டு, இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரித்தவர்களாகும் படிக்கு தங்களை ஒப்புக் கொடுத்து, தங்கள் மனக் கண்களை குருடாக்கி கொள்கின்றார்கள். நீங்கள் வெளி ஊருக்கு சென்று வேலை செய்யக்கூடாது என்பது பொருளல்ல. மாறாக, தேவனை அறியாத வர்கள் இந்த உலகத்திலே நடந்து கொள்வது போல, கல்வி, வேலை, ஆஸ்தி, அந்தஸ்து போன்றவைகளை வாழ்வின் முன்னேற்றித்தின் அளவுகோலாக வைத்திருக்காமல், தேவன் உங்கள் வாழ்வில் கொடுத் திருக்கும் அருமையானதும் நன்மையானதுமான சந்தர்ப்பங்களை ஆராய் ந்து அறிந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

தாயின் கருவில் என்னை தெரிந்து கொண்ட தேவனே, நான் என் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உணர்ந்தவனாக, நீர் கொடுத்த அருமையான சந்தர்ப்பங்களை பயன்படுத்த கிருபை செய்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:17-19