தியானம் (மார்கழி 26, 2023)
உலக பொருட்களின் எல்லை
யாக்கோபு 1:14
அவனவன் தன்தன் சுயஇச்சையினாலே இழுக்கப்ப ட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசியானவனின் வாழ்க்கையிலே ஏற்பட்டிருந்த பொருளாதர நெருக்கடியினிமித்தம் அவனுடைய குடும்பம் பல கஷ;டங்களை எதிர் நோக்க வேண்யிருந்தது. குடும்பத்தின் பிழை ப்பிற்காக, அவன் தன் வீட்டிற்கு முன்பாக ஒரு சிறிய கொட்டில் கடை யைப் போட்டு, தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை விற்றுவந் தான். அந்த வியாபாரமானது முன் னேற்றம் கண்டது. மாதங்கள் கட ந்து சென்ற போது, அவனுடைய குடு ம்பத் தேவைகளை சந்திக்கத் தேவை யான அளவு இலாபம் அவனுக்கு கிடைத்தது. அத்தோடு, வார இறுதி நாட்களிலே பட்டணத்திலே கூடும் சந்தையிலும் ஒரு கடையை ஆரம் பித்தான். அதிலும் அவன் விருத்தியடைந்தான். தாராளமாய் உழைத்து வந்த அவன், அடுத்த ஊர்களிலும் ஒரு கிளையை ஆரம்பித்தால் இன் னும் அதிகமாக உழைக்கலாம் என்று மனதிலே தீர்மானம் செய்து கொண்டு, கிளைகளை படிப்படியாக ஆரம்பித்தான். அவன் வியாபார மானது பிரபல்யமடைந்தது. இப்படியாக வியாபார விருத்தி ஏற்பட்ட தினால், கர்த்தருடைய கரம் தன்னோடு இருக்கின்றது என்று அவன் எண்ணிக் கொண்டான். ஆனால், அவனுக்கு இப்போது, ஜெப கூட்டங் களுக்கு செல்ல நேரம் இல்லை. உபவாச கூட்டங்களில் பங்குபற்ற முடியவில்லை. அதிகாலையில் எழுந்தவுடன் கர்த்தருடைய வசனத்தை தியானிக்க நேரமில்லை ஏனெனில், தன் வியாபாரத்தை நடத்துவதிலும், பணத்தை சேகரிப்பதிலும், நிலங்களை வாங்கி, காய்கறி தோட்டங்களை விருத்தி செய்து, கடைகளை புனரமைப்பதிலேயே அவன் அதிக திட்டம் போட வேண்டியிருந்தது. பிரியமான சகோதர சகோதரிகளே, அந்த விசு வாசியானவனின் குடும்பத்தில் பொருளாதார தேவை இருந்தது உண்மை, ஆனால் அந்தத் தேவையானது அவனுடைய மனதிலே எப் போது இச்சையாக மாறியது என்பதை சிந்தித்துப் பாருங்கள். இன்று சில தேவ பிள்ளைகளும் இவ்விதமாக இழுப்புண்டு போய்விடுகின்றா ர்கள். இந்த உலகத்தின் ஆஸ்திகள் பெருகினால், தேவன் அவனோடு இருக்கின்றான் என்று கூறிவிடுவது சரியாகுமோ? அப்படியானால், இந்த உலகத்திலே தேவனையறியாதவர்கள் பெரும் ஐசுவரியவா ன்களாக இருக்கின்றார்கள் அல்லவா? எனவே, பொருளாசையின் இச்சை உங்கள் இருதயங்களை ஆண்டு கொள்ளாதபடிக்கு, அவைக ளுக்கு ஒரு எல்லையை வைத்துக் கொள்ளுங்கள். பண ஆசை வந் தால், எல்லாத் தீமைகளும் அதனோடு கூடி வரும்.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் என்ற எண்ணம் என் இருதயத்தில் ஒவ்வொரு நாளும் பெருகும்படிக்கு கிருபை செய்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 தீமோ 6:9-10