புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 25, 2023)

ஒருவரும் கெட்டுப்போகாமல்...

ரோமர் 8:32

தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர்இ அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?


'அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ் வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்ப டாதிருங்கள்; இதோ, எல்லா ஜன த்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்க ளுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த் தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணை யிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.' (லூக்கா 8:12). ஆம், தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தி யஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலக த்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16). தேவ கிருபையினாலே விசுவா சத்தைக்கொண்டு இந்த மகத்துவமான இரட்சிப்பை நாம் பெற்றுக் கொண்டோம். நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையி ன்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். அந்த பாவ சாப கட்டுகளிலில் உணராமல் வாழ்ந்து வந்த நம்மை, விடுதலையாக்கும்படிக்கு தேவ தயவு நம்மேல் வெளிப்பட்டது. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைக ளினால் உண்டானதல்ல. பிதாவாகிய தேவன்தாமே, தம்முடைய திருக் குமாரனாகிய இயேசுவை நமக்காக கொடுத்தார். அவரோடே கூட நம க்கு தேவவையான யாவற்றையும் அருளியிருக்கின்றார். எனவே, இந்நா ட்களிலே, நாம் மிகவும் உணர்வுள்ளர்களாய், ஞானமாய் நடந்து கொள்ள வேண்டும். ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையவேண்டும் என்ற நோக்கமானது நிறைவேறும்படி, இந்த சமா தானத்தின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும். அத்தோடு, அந்த நற் செய்தியானது நம்மில் முற்றிலும் நிறைவேறும்படிக்கு, முற்காலத்து மாம்ச கிரியைகள் நம்மை ஆளுகை செய்யாத தபடிக்கு, நம்முடைய இருத யத்தை எல்லாக் காவலோடு காத்துக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

உம்முடைய திருகுமாரனாகிய இயேசுவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருத்த பிதாவே, அவருடைய சாயலுக்கு ஒப்பாககும் கிரியைகளையே என் வாழ்வில் நடப்பிக்க எனக்கு பெலன் தருவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:9