புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 24, 2023)

சுடர்களைப் போல பிரகாசியுங்கள்

பிலிப்பியர் 2:14

ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,


இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகா சித்தது. அந்த திவ்விய ஒளியானது நம்மை பிரகாசிப்பித்தது. நம்மை மீட்க, தம்மை கொடுத்த, ஆண்டவராகிய இயேசு வழியாக அந்த ஜீவ ஒளியை தரித்திருக்கின்றோம். தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமா யும், பரிசுத்த ஜாதியாயும், அவ ருக்குச் சொந்தமான ஜனமாயும் வேறு பிரிக்கப்பட்டிருக்கின் றோம். எதற்காக நாம் இத்தனை மகத்துவள்ள பதவியை இலவ சமாக பெற்றுக் கொண்டோம்? கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாக வாழ வேண்டும். அப்படி வாழ்வதென்றால், தேவனுக்கென்று நாம் செய்யும் எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும், தர்க்கிப்பில்லாமலும் செய்ய வேண்டும். இந்த உலகத்திற்கு ஒளியாக இருக்க வேண்டிய நாம், நம் நடுவே இருளை உருவாக்குவோமாக இருந்தால், நாம் ஜீவ ஒளியை அல்ல, இருளையே நாடித் தேடுகின்றவர்களாக இருப்போம். 'தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷ மாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல் லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நட வாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்ப ட்டிருப்போம்;' (1 யோவான் 1:5-7). எனவே, இந்நாட்களிலே, நம்முடைய ஆண்டவராகிய இயேசுவின் முதலாம் வருகையை நினைவுகூருகின்ற நாம், அவருடைய இரண்டாம் வருகைக்காக எப்போதும் ஆயத்தப்படு கின்றவர்களாக காணப்பட வேண்டும். பிரியமானவர்கனே, முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவ ருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறா தவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக் கிறீர்கள். இந்த உலகத்திற்கு அந்நியர்களும் பரதேசிகளுமா யிரு க்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சை களை விட்டு விலகி,இந்த உலகத்தின் இருளுக்குள் மறுபடியும் செல் லாமல், ஜீவ வசனத்தை இறுகப்பற்றிக் கொண்டவர்களாக, நம் நண்ப ர்கள், உறவினர்கள், சக விசுவாசிகள் நடுவே சுடர்களைப் போல பிரகா சிப்போமாக.

ஜெபம்:

பரலோக தேவனே, உமக்கு பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாக கட்டப்பட்டுவரும்படிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 9:6