புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 21, 2023)

கிறிஸ்துவை தரித்த வாழ்க்கை

யோவான் 15:6

ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப் போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்;


முற்றிலும் கனிதரும் உயர்குலத் திராட்சைசெடியிலே, பல கிளைகள் இருந்தது. அந்த கிளைகளில் சுவையான கனிகள் குலைகுலையாக தொங்கியது. சில போகங்கள் கடந்து சென்ற பின்பு, அந்த மரத்தின் ஒரு கிளையானது, உலர்ந்து போவதைக் கண்ட தோட்டக்காரன், ஏன் இப்படி ஆயிற்று என்று ஆராய்ந்து பார்த்தபோது, அந்த கிளையானது, திராட்சைசெடியிலிருந்து நறுக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அதனால், நாளடைவில் அந்தக் கிளை உப யோகமற்றதாக உலர்ந்து போயிற்று. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே, தம்முடைய சீஷர்களை நோக்கி: நானே திராட்சச்செடி, நீங் கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடு ப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம் என்று கூறினார். கிறிஸ்தவ வாழ்க்கையானது, பெயரளவிலான வாழ்க்கை யல்ல. அது கிறிஸ்துவோடு நாம் வாழும் வாழ்க்கை. கிறிஸ்து நம்மில் தரித்திருக்கும் வாழ்க்கை. கிறிஸ்துவின் சாயலிலே நாள்தோறும் வளர்ந்து பெருகும் வாழ்க்கை. நன்றாக கவனியுங்கள், அந்தக் காலத்திலே குலைகுலையாக சுவையான கனிகளை கொடுத்தேன், இன்று கனியற்றிருக்கின்றேன் என்று ஒரு விசுவாசியானவன் கூறுவானாக இருந்தால், அவன் திராட்சை செடியிலிருந்து நறுக்கப்பட்ட அந்த கனியற்ற உலர்ந்த கிளைளைப் போல இருப்பான். தன்னை கிறிஸ்துவுடையவன் என்று சொல்லுகின்றவனுடைய வாழ்விலே, பரிசுத்த வேதாகமம் கூறும் கனிகள் காணப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ஆரம்ப நாட்களிலே என்னிருதயத்தில் கசப்பு, வன்மம், பகை இருந்த தில்லை. ஆனால் இன்று எப்படியோ அவை இருதயத்திலே உள்ளிட்டு விட்டது என்று ஒரு ஊழியனோ, விசுவாசியோ தனக்கு ள்ளே உணர்ந்து கொள்வானாக இருந்தால். அவன் வாழ்க்கையிலே மாம்ச இச்சை இருப்பதினாலே, அவன் தன் வாழ்க்கையை வேத வார்த் தையின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்த்து, மனந்திரும்பி, தன்னை சீர்செய்து கொள்ள வேண்டும்.

ஜெபம்:

பலன் கொடுக்கும் வாழ்க்கைக்கு என்னை அழைத்த தேவனே, நான் எக்காலத்திலும் வேத வார்த்தையில் நிலைத்திருக்கின்றவனாக வாழ்ந்து, நல்ல கனிகளை கொடுக்கும்படிக்கு என்னை உணர்வுள்ளவனாககுவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:22-24