புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 19, 2023)

பயப்படாதிருங்கள்

1 இராஜாக்கள் 19:9

எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.


ஆகாப் என்னும் இஸ்ரவேலின் ராஜா, புறஜாதியாகிய சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்ப ண்ணினதுமல்லாமல், அவன் போய் அந்நிய விக்கிரகங்களாகிய பாகா லையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு, தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப் பித்தான். ஒரு சமயம் அவனு டைய மனைவியாகிய யேசபேல், கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய எலியாவை கொன்றுபோடும்படி வகை தேடியதை, தேவ மனுஷனாகிய எலியா கேள்விப் பட்ட போது, அவளுக்கு பயந்ததால், தன் உயிரைக் காக்கும்படி, தப்பியோடி, ஒரேப் பர்வதத்தில், ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார். அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத் திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலி பீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். இந்த சம்பவத்திற்கு ஒத்ததாகவே, சில வேளைகளிலே சில விசுவாசிகள் நினைத்துக் கொள் கின்றார்கள். அதற்கு நாமும் விதிவிலக்கானவர்கள் அல்லர். நான் ஒருவன் மாத்திரம் பக்தி வைராக்கியமாக இருக்கிறேன். உண்மையுள்ளவர்கள் ஒருவருமில்லை. நான் கிறிஸ்தவன் என்பதை வேலையிடத்தில் அறிந்து கொண்டால் என் வேலைக்கு என்ன ஆகுமோ? கர்த்தரை சேவிப்ப தினால், அதிகாரிகளால் எனககு பொல்லாப்பு நேரிடுமோ? இயேசுவின் நாமத்தை அறிக்கையிட்டால் நண்பர்கள் உறவினர்கள் என்னை தள்ளி விடுவார்களோ என்று மனிதர்களுக்கு பயந்து, மறைவான வாழ்க்கை வாழ்கின்றார்கள். கர்த்தர் எலியா செய்ய வேண்டிய காரியம் என்ன என்பதை கூறி, அவனை நோக்கி: பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங் கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார். பிரியமான சகோதர சகோதரிகளே, ஆத்துமாவைக் கொல்ல வல்லவ ர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, நீர் பட்சத்தில் இருக்கின்றீர் என் பதை உணர்ந்து, மனிதர்களுக்கு பயப்படாமல், உம்முடைய சித்தத்தை என் வாழ்வில் நிறைவேற்ற பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 8:31