புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 16, 2023)

என்னை பலப்படுத்தி சகாயம்பண்ணும் தேவன்

ஏசாயா 41:10

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்;


என் வீட்டின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு, நான் என்னால் முடிந்த யாவையும் செய்துவிட்டேன். நான் செய்யக்கூடியது என்று இனி ஒன்றுமில்லை. என் பெலன் அவ்வளவுதான் என்று ஒரு விசுவாசியானவன் கூறிக் கொண்டான். இப்படியான சூழ்நிலைகள் அந்த விசுவாசி யானவனின் வீட்டில் மாத்திரமல்ல, எல்லோருடைய வாழ்க்கையிலும் உண்டாகுவதுண்டு. குடும்பத்திலே, வேலையிலே, பிள்ளைகள் படிக் கும் பள்ளிக்கூடத்திலே, ஊழியத்தின் பாதையிலே, உறவுகள் மற்றும் நண்பர்கள் மத்தியிலே உண்டாகும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு அல்லது ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்கு நாம் பல முயற்சிகளை எடுக்கின்றோம். முயற்சிகள் எடுப்ப நல்லது, ஆனால், சில வேளைகளிலே சூழ்நிலைகள் நம்முடைய பெலத்திற்கு மிஞ்சி சென்று விடுகின்றது. அந்த வேளையிலே, சிலர் அந்த விசுவாசியானவனை போல தங்கள் இயலாத நிலைமையை ஏற்றுக் கொள்ளுவதில்லை. மாறாக, 'நான்' என்கிற பெருமையை விட் டுவிடுவதில்லை. 'நான் செய்வேன், என்னால் கூடும், எனக்கு எல்லாம் தெரியும்' என்னும் சுயபெலத்தினால் நாம் இந்த உலகத்தை ஜெயிக்க முடியாது. அதனால்தான், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து நாம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழும் வழியை காண்பித்தார். அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்று கூறினார். இந்த உலகத்திலே நாம் தனித்துவிடப்படும் சூழ்நிலைகள் உண்டாகலாம். அதாவது, சில தீர்மானங்களை அவரவர் தங்கள் இருயத்திலே உறுதியாக எடுக்க வேண்டும். ஆனாலும் நாம் தனித்து விடப்படுவதில்லை என்பதை நாம் திட்டமாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஆண்டவராகிய இயேசு தனியாக கல்வாரி மலையிலே செய்து முடிக்க வேண்டிய காரியம் இருந்தது. அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவி டுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது. ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார் என்றார். ஆம், பிரியமானவர்களே, சோர்ந்து போகாதிருங்கள். என்னை பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவினாலே நான் எல்லாவற்றையும் செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கையோடு முன்னேறுங்கள்.

ஜெபம்:

நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் என்று உரை த்த தேவனே, நான் செய்ய வேண்டிய காரியங்களை, உம் சித்தப்படி செம் மையாக செய்து முடிக்க எனக்கு சகாயம் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்யிர் 4:13