புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 15, 2023)

சிறுமையும் எளிமையுமானவர்கள்

சங்கீதம் 68:5

தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவரு மாயிருக்கிறார்.


ஒரு தேசத்தை நீதியும் நியாயமுமாக ஆண்டு வந்த ராஜாவானர், தேசத்தின் குடிகளின் சேமநலனை விசாரிக்கும்படி, பட்டணங்கள், கிராமங்கள்தோறும் அதிகரிகளை ஏற்படுத்தி, அந்த அதிகாரிகள் செய்ய வேண்டிய நீதியும் நியாயமுமான காரியங்களை திட்டமாக அவர் களுக்கு கட்டளையிட்டிருந்தார். குறிப்பிட்ட கிராமத்தை விசாரித்து வந்த அதிகாரி, முகதாட்சண்யம் பாரா ட்டி, எளிமையும் சிறுமையுமான மக்களை விசாரிக்காமல், தனக்கு வேண்டியவர்களுடைய காரியங்களை மட்டும் விசாரித்து வந்தான். இதனால், அந்த கிராமத்திலுள்ள பலர் மிகவும் கஷ்டத்திற்குள்ளா னார்கள். சில வருடங்கள் சென்ற பின், இந்த செய்தியானது ராஜா வானவருடைய காதுகளிலே எட் டியது. அவர் தீவிராமாக அந்த கிராமத்திற்கு சென்று அங்கு நடக்கும் காரியங்களை விசாரிக்கும்படி தன்னுடைய மந்திரிக்கு அனுப்பினான். நடந்த சம்பவங்களை உறுதி செய்த ராஜா, மிகவும் கோபமடைந்தவராய், அந்த அநீதியான அதி காரியை சிறையிலே அடைக்கும்படி கட்டளையிட்டு, அந்த கிராமத்தி லுள்ள எளிமையும் சிறுமையுமானவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தார். பிரியமானவர்களே, இந்த உலகத்திலே, நாம் வேலை செய் யும் இடங்களிலே, தங்கியிருக்கும் இடங்களிலே, உறவுகள் மத்தியிலே அநீதியான செயல்கள் நடைபெறலாம். நம்முடைய தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றார். எனவே, உங்கள் தேவைகளை மட்டுமல்ல, உங்கள் குற்றங் குறைகளையும் உண்மையான மனதோடு அவருக்கு தெரியப்படுத்துங்கள். தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிரு க்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார். தேவன் தனிமையானவர்க ளுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள். பிரியமானவர்களே, நீங்கள் உங்கள் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்த மான பக்கதியுள்ளவர்களாக வாழ விரும்பினால், உங்கள் வாழ்க் கையை இந்த உலகத்தினால் கறைப்படுத்திக் கொள்ளாமல், தேவ நீதியை நிறைவேற்றி, உங்கள் பரம தந்தையைப் போல திக்கற்ற பிள்ளைகளும் விதவை களும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரியுங்கள்.

ஜெபம்:

உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கின்ற பிதாவாகிய தேவனே, நானும் உம்மைப் போல மனதுடையவனாக வாழும் படிக்கு, மனதுருக்கமுள்ள இருதயத்தை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:27