தியானம் (மார்கழி 14, 2023)
பெலனற்ற நாட்கள்
சங்கீதம் 71:9
முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.
குறிப்பிட்ட ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனானவன், பல சூழ்நிலைகள் காரணமாக, அந்த ஊரின், வாழ்க்கை நிலையானது நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிந்ததால், வேறொரு தேசத்திற்கு சென்று, அந்த தேசத்தின் குடியுரிமையை பெற்று, தன் இளமைக் காலங்களிலே கருத்தோடு உழைத்து, சட்டப்படி தேசத்தின் வரிகளையும் நிலுவைகளையும் செலுத்;தி வந்தான். அவன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற நாளிலிருந்து, அந்த தேசமானது, அவனுக்கு ஓய்வூதியத்தை வழங்கி, அவனுடைய மருத்துவ தேவைகள் யாவையும் சந்தித்து வந்தது. அவனுடைய தேவைகளை மட்டுமல்ல, தங்கள் உடற்பெல வீனங்களால் உழைக்க முடியாத வர்கள், திக்கற்றிருக்கும் குடிமக்க ளையும் அவர்களுடைய வயோதிப நாட்களில் பராமரித்து வந்தது. இந்த நிலையற்ற இந்த உலகத்திலும், தேசங்களிலே நன்மைகள் நடப்பதை காண்கின்றோம். கோணலும் மாறு பாடுமான இந்த நிலையற்ற உலகத்திலிருந்து மீட்கப்பட்டு, நிலை யான பரம தேசத்தின் குடிமக்களாகும்படி தெரிந்து கொள்ளபட்ட நம்மை, பரம தேசத்தின் பிதாவானர் நம்முடைய பெலன் குறைந்து போகும் நாளில் நம்மை கைவிடுவாரோ? அவர் ஒருபோதும் கைவி டமாட்டார். காலங்கள் கடந்து செல்லும் போது, சரீரத்தின் பெலனானது குன்றிப் போகின்றது. முன்பு போல, சுதந்திரமாக நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு செல்ல முடியாதபடிக்கு, மற்றவர்களில் தங்கி வாழும் நிலைமை ஏற்படுகின்றது. சில வேளைகளிலே நம்பியி ருந்தவர்களும் கைவிட்டு போய்விடுகின்றார்கள். சிலர் வைத்தியசாலை களிலும், பராமரிப்பு நிலையங்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள். வறுமையல்ல, தனிமையே மிகபெரிய கொடுமை என்று உணர்ந்து கொள்கின்றார்கள். ஆனால், நாம் வீட்டிலிருந்தாலும், காவலில் இருந் தாலும், நம்முடைய ஆண்டவராகிய இயேசு நம்மை மறந்து போகமாட்டார். முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும் என்று தேவ பக்தன் தன் நெருக்கத்திலே கர்த் தரை நோக்கி கூப்பிட்டான். அவன் அவரை கூப்பிடுவதற்கு முன்ன தாகவே அவனுடைய நாட்களை அவர் அறிந்திருக்கின்றார். தம்முடை யவர்களை அவர் தம் உள்ளங்கையில் வரைத்திருக்கின்றார். அவர் அறியாமல் அவருடையவர்களுக்கு ஒன்றும் நேரிடுவதில்லை. எனவே, திடன் கொள்ளுங்கள். ஆண்டவர் இயேசு உங்களோடு இருக்கின்றார்.
ஜெபம்:
என் பலத்த அடைக்கலமாயிருக்கின்ற தேவனே, எக்காலத்திலும் என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருக்கும்படி என்னை நீர் வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 71:17-18