தியானம் (மார்கழி 13, 2023)
காருண்யமான கர்த்தர்
உபாகமம் 31:6
அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை
ஒரு சமயம் ஆண்டவர் இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட் கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப்பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள். ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக் கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப்பார்க் கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களு க்குச் சொல்லுகிறேன்; அவர்க ளெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயி ருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார். இந்த சம்பவத்தைக் குறித்து பேசும் போது, பொதுவாக காணிக்கை தசம பாகத்தை பற்றி சிந்தித்துக் கொள்கின்றார்கள். ஆனால், அன்றைய நாளிலே, அந்த இடத்திலே, இயேசுவின் சீஷர்கள் அவரருகே இருந்தார்கள். அத்தோடு மதத் தலை வர்களும், வேறு ஜனங்களும் அங்கே இருந்திருக்கலாம். பலரும் பல விதமாக அந்த சம்பவத்தை அவதானித்திருந்திருக்கலாம். ஆனால் அந்த ஏழை விதவையானவள் தன்னிடம் இருந்ததெல்லாவற்றையும் கொடுத்து விட்டாள் என்று இயேசுவானவருக்கு எப்படித் தெரியும்? ஏனெனில், அவர் ஆண்டவர்! அவர் மனிதர்களுடைய வாழ்க்கையையும், அவர்களு டைய மனநிலையையும் அறிந்திருக்கின்றார். ஏழை, விதவை, திக்கற்ற வர்கள் என்று எவரையும் அவர் தள்ளிவிடுபவரல்லர். ஒரு வேளை, இன்று அதிகம் கொடுக்கின்றவர்களை மனிதர்கள் அதிகமாக கனப்ப டுத்திக் கொள்கின்றார்கள். ஆனால், நம்முடைய ஆண்டவராகிய இயே சுவோ, இருதயங்களை ஆராய்ந்தறிக்கின்றார். கருப்;பொருளாவது, ஆண் டவர் இயேசு நம்முடைய வாழ்வின் நிலைமையை நன்றாக அறிந்தி ருக்கின்றார். மனிதர்கள் பார்க்கும் பிரகாரமாக அவர் பார்கின்றவர்; அல்லர். அவராலே ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நாம் ஐசுவரியவான்க ளாகவும், சமுக அந்தஸ்துள்ளவர்களாகவும், கல்விமான்களாகவும் இரு க்கத் தேவையில்லை. நாம் யாராக இருந்தாலும், எந்த நிலைமையில் இருந்தாலும், எந்த வயதுடையவர்களாக இருந்தாலும், மனத்தாழ் மையோடு அவரை நாடித் தேடுகின்ற ஒருவரையும் அவர் புறம்பே தள்ளிவிடுகின்றவர் அல்லர். எனவே, எந்த சூழ்நிலையிலும் அவரை பற்றிக் கொண்டிருங்கள்.
ஜெபம்:
இருதயங்களை ஆராய்ந்தறிக்கின்ற தேவனே, நான் ஒருபோதும் பெருமையான உள்ளம் கொண்டிராமல், மனத்தாழ்மையோடு உம்மை பற்றிக் கொண்டிருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஏசாயா 49:15-16