புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 09, 2023)

கிறிஸ்து உங்களில் வாசமாயிருக்கின்றார்

லூக்கா 4:18

கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்;


அக்காலத்திலிருந்த மதத் தலைவர்கள், சிறப்பு வர்க்கங்களை சேர்ந்த மனிதர்கள் இயேசு கிறிஸ்துவை முழு மனதோடு எதிர்த்து நின்றார்கள். இவர் ஏழை எளியவர்களையும்;, பாவத்தில் விழுந்து விடுதலையடைய வழிதெரியாமல் தவிக்கும் பாவிகளையும், சமுதாயத்தினால் கைவிடப் பட்டு, தள்ளப்பட்வர்களையும், திக்கற்ற பிள்ளைகளையும் தேடிச் செல்கின்றார் என்று அறிந்த போது, அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தீர்க்கதரி சிகள் முன்னுரைத்தது போல, 'தரி த்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிர சங்கிக்கும்படி என்னை அபிஷேக ம்பண்ணினார்;. இருதயம் நருங்குண் டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர் களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிர சித்தப்படுத்தவும்' இந்த உலகத்திற்கு வந்தார். பெருமையுள்ளவர்களு க்கோ இந்த வாக்கியங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், இதுவே கிறிஸ்துவில் இருந்த சிந்தையென்று நாம் அதை மேன்மை பாராட்டுகின்றோம். நாம் அப்படியாக மேன்மை பாராட்டினால், கிறிஸ்து விலிருந்த ஆவியை பெற்ற நாம் எப்படிப்பட்ட காரியங்களை செய்ய வேண்டும். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கற்பித்து கொடுத்த காரியங்களை நாம் செய்ய வேண்டும். உயர்ந்தவன், தாழ்ந்த வன், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல், மனத்தாழ்மையோடு, இரட்சிப்பின் அவசியத்தை உணர்ந்து, தம்மிடம் வந்த ஒருவரையும் ஆண்வடர் இயேசு தள்ளிவிடவில்லை. ஆனால், பெருமையுள்ளவர்களாக இருந்து, சிறுமைப்பட்டவர்களை ஒடுக்கின்றவர்களுக்கு அவர் எதிர்த்து நின்றார். ஆனால், இன்று, ஆண்டவர் இயேசுவை ஏற்றுக் கொண்டோம் என்று கூறுகின்ற சிலர், ஏழை எளிவயர்களை, சிறுமைப்பட்டவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. அப்படிப்பட்டவர்கள் திக்கற்றவர்களுக்கு உத விகளை செய்தால், தங்களுடைய பெயருக்கும் புகழுக்குமாகவே செய் கின்றார்கள். இவர்கள் கிறிஸ்துவை அறிய வேண்டிய பிரகாரமாக இன் னும் அறியாதவர்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, நீங்களோ, கிறிஸ்துவுடையவர்கள். விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருத யங்களில் வாசமாயிருக்கின்றார். எனவே, ஆண்டவர் இயேசு கிறி ஸ்து எப்படியாக தம்முடைய திருப்பணியை நிறைவேற்றி னாரோ, நாமும் அப்படியாகவே இருக்க வேண்டும். ஒருபோதும் இருதயத்தில் மேட்டி மையான எண்ணங்களுக்கு இடங்கொடாமல் தாழ்மையுள்ள இருதய த்தோடு தேவ பணியை நிறைவேற்றுங்கள்.

ஜெபம்:

தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அருளும் தேவனே, தாழ்மையின் மேன்மையை கற்றுக் கொடுத்த, உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவைப் போல நானும் மனத்தாழ்மையோடு பணி செய்ய கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:27