புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 05, 2023)

காரியத்தை நிதானித்து அறியுங்கள்

நீதிமொழிகள் 18:13

காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.


ஒரு கிராமத்திலே வசித்து வந்த விசுவாசியொருவன், தன் வீட்டிற்கு அருகிலே புதிதாக வந்த மனிதனொருவனோடு நட்புடன் பழகி வந் தான். இருவரும் ஒருவருக்கொருவர் நன்மைகளை செய்து வந் தார்கள். அந்த மனிதனானவன் பெரும் கல்விமானாக இருந்தான். ஒரு நாள், அந்த விசுவாசியானவன் தன் குடும்பத்தாரோடு, தெரு விலே சென்று கொண்டிருக் கும் போது, அந்த அயலவன், தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருப்பதை கண்டு, சற்று தூரத்தில் நின்று தன் கைகளை அசைத்து, சைகை காட்டினான். ஆனால், அந்த மனித னானவனோ இவனை காணதவன் போல, தன் நண்பர்களோடு தொட ர்ந்து பேசிக் கொண்டிருந்தான். ஒருவேளை நான் சையை காட்டியதை அவன் காணவில்லை என்று நினைத்து, மறுபடியும் கைகளை அசை த்து, சைகை காட்டினான், ஆனாலும் அந்த மனிதனானவனோ இவ னைக் கண்டு கொள்ளாதவன் போல, தொடர்ந்து தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். இதனால், அந்த மனிதனானவன், அந்த அயலவன் தெருவிலே தன்னை வெட்கப்படுத்தி விட்டான் என்று மிகவும் கோபமடைந்து, அவன் அருகே சென்று 'உன் கல்வியை குறித்து உன க்குள் பெருமை இருக்கின்றது என்று எனக்கும் தெரியும், உன் கல்வி கற்ற நண்பர்கள் முன்னிலையில் எனக்கு சைகையை காட்டுவது உன க்கு வெட்கமாக இருக்கின்றதா' என்று கூறினான். அதை கேட்டு அதிர் ச்சியடைந்த அந்த மனிதனானவன் நீ எதைக் குறித்து பேசுகி ன்றாய். சற்று நிதானமாக பேசுவோம் என்று கூறினான். ஆனாலும், அந்த விசுவாசியானவனோ காரியத்தை கேட்க மனதில்லாமல், தன் செவி களை அடைத்துக் கொண்டு, அவனை மிகவும் கண்டித்து பேசினான். சற்று நேரத்திற்கு பின், அந்த அயலவன், அந்த மனிதனை நோக்கி: நண்பனே, என் முகத்தைப் பார். நான் என் கண்ணாடியை வீட்டே விட்டு வந்து விட்டேன், சற்று தூரத்தில் என்ன நடக்கின்றது என்று எனக்கு பார்க்க முடியாது. நீ சைகை காட்டியதை நான் காணவில்லை. என்னை மன்னிக்க வேண்டும் என்று சாந்தத்தோடு பதிலளித்தான். பிரியமான வர்களே, நாம் யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்க வேண் டும். மனிதனுடைய கோபம் சுயநீதியையே நிறைவேற்றும். நம் வாழ்க் கையிலே காரியங்களை நிதானித்து அறியும்படிக்கு, நீடிய பொறுமை யின் கனியானது நம் வாழ்வில் பெருக வேண்டும்.

ஜெபம்:

நீதியின் தேவனே, என்னுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாது என்பதை எப்போதும் உணர்ந்தவனாய், நீடியபொறுமையோடு நிதானமாய் நடந்து கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:19