புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 03, 2023)

விசுவாசி யார்?

யோவான் 15:5

நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்;


'தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.' (யாக்கோபு 2:19) என்ற வசனத்தை வாசித்த விசுவாசியொருவன் யார் உண்மை யான விசுவாசி என்பதைக் குறித்து தியானித்துக் கொண்டிருந்தான். 'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவ னோ அவன் கெட்டுப்போகாமல் நித் தியஜீவனை அடையும்படிக்கு, அவ ரைத் தந்தருளி, இவ்வளவாய் உல கத்தில் அன்புகூர்ந்தார்.' என்ற சத்தி யத்தை பிசாசுகளும் அறிந்திரு க்கின்றபடியினாலேயே, சுவிசேஷ த்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய உல கத்தாருக்கு பிரகாசமாயிராதபடிக்கு, பிசாசானாவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். ஆண்ட வர் இயேசுவை விசுவாசிக்கின்றவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று அறிந்தபடியினாலே, நம்மிடத்தில் பிரகாசித்த மகிமையின் ஒளியாகிய அந்த சுவிசேஷமானது, நம்மிடத்திலிருந்து மற்றவர்களிடத்திற்கு பிரகாசி க்காதபடிக்கு, இயேசு கிறிஸ்துவை அறிந்த நம்முடைய மனதானது கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி, பிசானானவன், நம்மை வஞ்சிக்க வகை தேடித்திரிகின்றான். அதாவது, கிறிஸ்துவை விசு வாசிக்கின்றேன் என்று கூறும் எவனும், கிறிஸ்துவின் சிந்தையையுடை யவனாக, அவரைப் போல வாழ்கின்றான். ஆனால், நான் கிறிஸ்துவை விசுவாசிக்கின்றேன் என்று கூறி, கிறிஸ்துவைப் போல வாழாமல் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷத்தை தரித்து வாழ்வதையே பிசாசானவன் விரும்புகின்றான். கிறிஸ்து நம்மில் இல்லையென்றால், நம்மிடத்தில் இருக்கும் விசுவாசமானது போலியானதாக இருக்கும். கிறிஸ்து நம்மில் ஜீவிக்கின்றவராக இருந்தால், கிறிஸ்துவின் கிரியைகள் நம்மில் அனுதி னமும் வெளிப்படும். கிறிஸ்துவின் கிரியைகள் என்ன? அவரிடத்தி லிருந்த சிந்தையையென்ன? அவர் தாழ்மையும், கீழ்படிவுள்ளவருமாக, உன்னத்திலிருந்து தாழ்விடங்களுக்கு இறங்கி, பிதாவாகிய தேவனு டைய சித்தத்தை நிறைவேற்றி முடித்தார். உலகத்திற்கு வெளிச்ச மாகவும், பூமிக்கு உப்பாகவும் வந்தார். நாமும்,அவருடைய விசுவாசி களானால், நாம் பெற்றுக் கொண்ட கிறிஸ்துவின் மகிமையின் ஒளியை இந்த உலக்திற்கு வீசவேண்டும். கிறிஸ்துவின் மனத்தாழ்மைiயும், கீழ் படிவையும் தரித்தவர்களாக, இந்த பூமிக்கு உப்பாக வாழ வேண்டும்.

ஜெபம்:

என்னில் நற்கிரியைகளை தொடங்கிய தேவனே, முடிவுபரிய ந்தமும் நான் உம்மைப் பற்றிக் கொண்டி, கிறிஸ்துவின் சாயலிலே அனுதினமும் வளர்ந்து பெருகின்றவனாக இருக்கும்படி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 2:15-20