புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 30, 2023)

மகிமையுள்ள வாடாத கிரீடம்

1 தீமோத்தேயு 6:20

ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக் கொண்டு,


ஆகாரத்தை உட்கொள்ள அமர்ந்திருக்கும் சிறுவர்கள், சில வேளைகளிலே மற்றவனுடைய கோப்பையிலே என்ன இருக்கின்றது என்று பார்த்துக் கொள்கின்றார்கள். குழந்தைகள் மற்றய குழந்தையிடம் இருப்பது தனக்கும் வேண்டும் என்று பிடிவாதமாக அழுது கொள் வார்கள். ஆனால், அந்தப் பொருளோ, உணவோ தனக்கு ஏன் தேவை என்பதையும், அதனால் தனக்கு உண் டாகும் பிரயோஜனத்தையும், பின்வி ளைவுகளையும் சிந்திப்பதற்கு அக்கு ழந்தைக்கு அறிவு போதாது. கிறிஸ்து வுக்குள் வளர்ந்தவர்களாகிய நாம் குழ ந்தைத்தனமாக நடந்து கொள்ளக்கூ டாது. எப்போதும் மற்றவனுடைய உண வுத் தட்டிலே என்ன இருக்கினறது. என்னுடைய தட்டு இப்படி இரு க்கின்றதே என்று எண்ணிக் கொள்ளாமல், தேவன் நமக்கு கொடுத்த வைகளுக்காக நன்றி செலுத்த வேண்டும். மோசே என்னும் குழந்தை யானது தேவனுடைய சித்தத்தை முன்குறித்த காலத்திலே நிறைவேற் றும்படி பிரத்தியேகமாக பிரித்தெடுக்கப்பட்டது. மோசே வளர்ந்து அறி வடைந்த போது, தேவனுடைய சத்தத்தை கேட்டு, அவருடைய வழியை பின்பற்றினான். நாம் யாவரும் மோசேயல்ல. ஆனால், மோசேயைப் போல நாமும் தேவசித்தத்தை நிறைவேற்ற பிரித்தெடுக்கப்பட்டோம். நாம் யாவரும் பிதாவாகிய தேவனுடைய பிள்ளைகளாக இருக்கின் றோம். பிதாவானவர், இயேசு கிறிஸ்துவிடம் இருந்த ஆவியை நமக்கும் கொடுத்திருக்கின்றார். எனவே, நாம் மோசேயைப் போல தேவன் நம க்கு காட்டிய வழியிலே நடக்க கற்றுக் கொள்ள வேண்டும். தன்னுடைய எஜமானனானவனிடத்தில் இரண்டு தாலந்துகளை பெற்றவன், ஐந்து தாலந்துகள் கொடுக்கப்பட்டவனைப் பார்த்து, நொந்து கொள்ளாமல், தனக்கு கொடுக்கப்பட்ட இரண்டு தாலாந்துகளில் உண்மையுள்ளவ னாக இருக்க வேண்டும். எஜமானனானவன் திரும்பி வரும் போது, தன் ஊழியர்களை பார்த்து, உண்மையும் உத்தமமுமனாவர்களே என்று அழைக்க வேண்டும். நம்முடைய பிரதான மேய்ப்பனாகிய இயேசு வெளிப்படும் நாளை எதிர்பார்த்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்மிடத்தில் கொடுக்கப்பட்டதை நாம் காத்துக் கொள்ளாமல், நம்மி டத்தில் இல்லாததைக் குறித்து கவலையடைவதில் என்ன பலன்? அவர் வரும் நாளிலே மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளும் படி, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாக, உற்சாகமனதோடு, அவர் ஒப்புவித்த நற்பொருளை கருத்தோடு காத்துக் கொள்வோமாக.

ஜெபம்:

உலகதோற்றத்திற்கு முன் என்னை முன்குறித்த தேவனே, என க்கு கொடுக்கப்பட்டதை நான் கருத்தோடு காத்துக் கொண்டு, உம்முடைய வார்த்தையின் வழியிலே வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:1-4