புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 29, 2023)

நிறைவான வேதம்

2 கொரிந்தியர் 1:20

தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.


நூலகத்திற்கு சென்ற மாணவனானவன், ஒரு புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றான். மறுநாள் அவன் அதை மறுபடியும் நூலகத்திலே திரும் பவும் கொடுத்துவிட்டான். அதைக் கண்ட அவனுடைய தகப்பனானவர், மகனே, நேற்று மாலைதானே அந்த புத்தகத்தை நீ நூலகத்திலிருந்து பெற்றுக் கொண்டாய், அடுத்த நாளே அதை திரும்பவும் கொடுத்து விட்டாய் என்று கேட்டார். அதற்கு அவன்: அப்பா, அந்த புத்கத் திலுள்ள ஒரு சிறிய பகுதி மட்டு ம்தான் எனக்குத் தேவையாக இரு ந்தது. அந்தப் புத்தகத்தின் ஆசிரி யர், அந்தப் பகுதியை மட்டும் தான் சிறப்பான எழுத்தியிருக்கின்றார். மற்றய பகுதிகளால் அதிக பிரயோஜனம் இல்லை என்று என்னுடைய வகுப்பாசிரியர் கூறினார். எனவே, நான் தேவையானதை கட ந்து இரவு கற்றுக் கொண்டடேன் என்று மறுமொழி கூறினான். இன் றைய நாட்களிலே, சில விசுவாசிகள், தேவனுடைய வார்த்தைகளையும் அவ்வண்ணமாகவே எடுத்துக் கொள்கின்றார்கள். எனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு, மிகுதியை விட்டு விடலாம் என்று எண்ணிக் கொள்கின்றார்கள். வேறுசிலர், இந்த உலகத்திலுள்ள மற்றய புத்தகங்களின் ஆசிரியர்களை விமர்சிக்கின்றது போல, பரிசுத்த வேதாகமத் தையும் விமர்சிக்கின்றார்கள். வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவி யினால் அருளப்பட்டிருக்கிறது. (2 தீமோ 3:16) வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசு த்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள். (2 பேதுரு 1:20-21). தேவனுடைய வாக்குத்தத்தங்கள் ஒன்றல்ல, எல்லாம் நமக்கு ரியவைகள். அவைகள் யாவும் கிறிஸ்து இயேசுவுக்குள் பரிபூர ணமாக அடங்கியிருக்கின்றது. அவைகளில் ஒரு சில வாக்குத்தத்தங் களை எடுத்துக் கொள்வேன். சில பிரமாணங்களை பின்பற்றுவேன். மிகுதியானவைகள் எனக்கு தேவையல்ல என்று தள்ளிவிடுவதற்கு, அவைகளின் ஒன்றும் குறைவானவைகள் அல்ல. அவை யாவும் நம் வாழ்விற்கு கிறிஸ்வின் நிறைவான சாயலிலே விருத்தியடைவதற்கு இன்றியமையாதவைகளாக இருக்கின்றது. தேவனுடைய மனுஷன் தேறி ன வனாக வும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும் படியாக அவைகள் நமக்கு அருளப்பட்டிருக்கின்றது.

ஜெபம்:

குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கினறதுமான உம்முடைய திவ்விய வார்த்தைகளை தந்த தேவனே, அவைகள் யாவையும் நான் பற்றிக் கொண்டு கிறிஸ்துவின் சாயலில் வளர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:7