புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 26, 2023)

ஜீவ வார்த்தையில்லாமல் வாழ முடியாது

உபாகமம் 8:3

மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்


சிறு பிள்ளைகள், தாங்கள் நினைத்த காரியம் நினைத்ததைப் போல நடைபெறாவிட்டால் அல்லது தாங்கள் பெற்றோரிடம் கேட்டுக் கொண்ட காரியத்தை பெற்றோர் அவர்களுக்கு கொடுக்காவிட்டால் அல்லது பெற்றோர்கள் அவர்களை சிட்சிக்கும்போது, அவர்கள் பெற்றோரோடு கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் பிடிவாதமாக இருப்பதை நாம் கண்டிருக்கின்றோம். சிறுவர்கள் மாத் திரமல்ல, குடும்பத்தில் ஏற்படும் சில சூழ்நிலைகளினாலே வளர்ந்தவர்க ளும் இப்படியாக குழந்தைத் தனமாக நடந்து கொள்கின்றார்கள். இது உப வாசம் அல்ல இதை உண்ணாவிரதம் என்று கூறலாம். சில வேளைகளிலே, இந்த உலக வாழ்க்கையிலே, இத்த கைய செயற்பாடுகள் அவர்கள் விரும்புகின்ற காரியங்களை நடப்பிக் கலாம். இதே பிரகாரமாக, சிலர் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையையும் அமைத்துக் கொள்கின்றார்கள். அதாவது, தாங்கள் நினைத்த காரிங்கள் தங்கள் இஷ;டப்படி நடக்காமல் போகும் போது, தங்கள் ஆவிக்குரிய ஆகாரமாகிய வேதத்தை தள்ளிப் போடுகின்றார்கள். நான் பரிசுத்த வேதாகமத்தை வாசிக்க மாட்டேன், அந்த ஜீவ வார்த்தைகளை தியானிக்க மாட்டேன் என்று மதியீனமான தீர்மானங்களை தங்கள் வாழ்க்கையிலே எடுத்துக் கொள்கின்றார்கள். இந்த உலகிலே, சரீத்திற்கு தேவையான ஆகாரத்தை உண்ணாமல், அதிகாரங்களுக்கு எதிராக உண்ணாவிரதங்கள் செய்கின்றவர்கள், அத னால் நில பலன்கள் அடைந்து கொள்ளலாம். ஒருவேளை மனிதர்கள் மத்தியிலே நன்மதிப்பை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், தன் ஆன்மீக வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளும்படிக்கு, அனுதின ஜீவ உண வாகிய தேவனுடைய வார்த்தையை ஒருவன் தள்ளிவிடுவதால், அவ னுக்கு வரும் பலன் என்ன? இப்படிப்பட்டவர்கள், கனியற்ற வாழ்க் கையை வாழ்வதற்கு தங்களை பிடிவாதத்தோடு ஒப்புக் கொடுக் கின்றார்கள். ஒரு விசுவாசியின் வாழ்க்கையிலே தேவன் விரும்பும் கனிகள் இல்லை என்றால், அவனிடம் வெளிப்படும் கிரியைகள் என்ன? அது மாம்சத்தின் கிரியைகளாக காணப்படும். தேவ வார்த்தையை தள்ளிவிடுகின்றவன், ஜீவ போஜனத்தை தள்ளிவிடுகின்றான். எனவே, வாழ்வில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளில் புத்திமான்களாக நடந்து கொள்வதற்கு, ஜீவ வார்த்தையை இறுகப் பற்றிக் கொண்டிருங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவன் தரும் திருவார்த்தைய எனக்கு தந்த தேவனே, சாதகமற்ற சூழ்நிலைகளிலே, நான் புத்திமான்ளாக நடந்து கொள்ளும்படி, உம்முடைய வார்த்தையை பற்றிக் கொண்டிருக்கும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 6:35