புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 25, 2023)

நீதிமான்கள் யார்?

சங்கீதம் 37:3

கர்த்தரை நம்பி நன்மை செய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்து கொள்.


கர்த்தருடைய நீதிமான்கள் யார்? நீதிமான்களின் செம்மையான வழி களை குறித்து நாம் அநேக காரியங்களை பேசலாம். நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கி றது.இவை யாவும் உண்மையானதும் அருமையானதுமான வார்த்தை கள். கர்த்தருடைய நீதிமான்களின் செயற்பாடுகள் எப்படியாக இருக்க வேண்டும்? அவன் நடைகளில் ஒன் றும் பிசகுவதில்லை. நீதிமானோ இர ங்கிக்கொடுக்கிறான். அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான். வாரி யிறைக்கின்றான், ஏழைக்களுக்கு கொடுக்;கின்றான். திக்கற்ற பிள்ளைக ளையும், விதவைகளையும் விசாரிக்கின்றான். எனவே, கர்த்தருடைய நீதிமான் என்று தன்னை காண்பித்துக் கொள்ளும் ஊழியனும், விசுவாசி யும் இப்படியாக இருக்க வேண்டும். ஆனால், உலக ஐசுவரியத்தை பெருக்கிக் கொண்டு, தனக்கும் தன் சந்ததிக்கும் சேர்த்து வைத்து, அவ்வப் போது, ஊருக்கு ஒரு சில தானதர்மங்களை செய்து, தங்களை மேன் மக்களாக காண்பித்துக் கொண்டு, சுகபோகமாக வாழும் மனிதர் கள், தங்களை தேவனுடையவர்கள் என்று கூறிக்கொண்டால், அவர்கள் ஊழியர்களானாலும், விசுவாசிகளானாலும், அவர்களை குறித்து எச்சரி க்கையுள்ளவர்களாக இருங்கள். நீங்கள் உண்மையான வழியிலே நடந்து, போதுமென்கிற மனதோடு, தேவ பக்தியுள்ளவர்களாக வாழும் போது, 'ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும் போது, நீங்கள் பயப்படாதிங்கள்.' நான் உத்தமமாய் வாழ்ந்தா லும், நான் கஷ;டப்படுகின்றேனே, அவர்களோ, செழிப்பாய் வாழ்கின் றார்கள் என்று குழப்பமடையாதிருங்கள். 'அவன் மரிக்கும்போது ஒன் றும் கொண்டுபோவதில்லை. அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல் வ துமில்லை. அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தி னாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும், அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான். கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக் கிறான்.' (சங்கீதம் 49:16-20) என்று பரிசுத்த வேதாகத்தில் வாசிக்கின்றோம். தேவனுடைய நீதிமான், இந்த உலக செல்வத்திலே ஏழையாய் இரு ந்தாலும் ஒருவேளை செழிப்பாக இருந்தாலும், அவன் தேவ நீதியை தன் கிரியைகளால் நிவைவேற்றுகின்றவனாகவே இருக்கின்றான்.

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த உலகத்தில் உண்டாகும் செழிப்பினால் நான் உம்மைவிட்டு தூரம் சென்றுவிடாதபடிக்கு, எப்போதும் உம்முடைய நீதியை நிறைவேற்றுகின்றவனாக வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:27