புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 24, 2023)

கொடுப்பதற்கு ஒன்றுமில்லையே?

2 கொரிந்தியர் 8:11

கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டா வதாக.


நாளாந்தம் உழைப்பதினால் வரும் ஊதியத்தில், தன் வாழ்க்கைய நடத்தி வந்த மனிதனொருவன், மிகவும் எளிமையான வீட்டிலே வாழ்ந்து வந்தான். வீட்டிலே இன்ன பொருள் இருக்கின்றது என்று குறிப்பிட்டு சொல்ல அவனிடம் எதுவும் இருந்ததுமில்லை. மற்றவனுக்கு கொடுப்பத ற்கு அவன் எதையும் சேர்த்து வைக்கக் கூடிய நிலைமையும் அவனிடம் இல்லை. ஒரு நாள் அவன் தன் மதிய ஆகாரத்தை சமைத்து, அதிலி ருந்து இரவுக்குரியதை பிரித்து வைத்து, மதிய ஆகாரத்தை உண்ணும்படி ஆயத்தப்படுத்திய போது, தெருவிலே அந்த வழியாய் சென்ற தரித்திரனொருவன், அவன் வீட்டி ற்கு முன்பாக வந்து பிச்சை கேட் டேன். ஐயா, பசிக்கின்றது, உண்ப தற்கு ஏதாவது கொடுங்கள் என் றான். அந்த மனிதனானவன், மனதுருகி, தான் இரவுக்கு என்று பிரித்து வைத்த ஆகாரத்தை அந்த தரி த்திரனுக்கு கொடுத்து, இப்படி உட்காரந்து சாப்பிடு என்று திண்ணையிலே அவனை இருத்தினான். பிரியமானவர்களே, இந்த உல கிலே, நாம் அறிந்து ஏழைகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். அவர்கள் இன்றைய நாளிலே உண்ண உணவின்றி, உடுக்க தகுந்த உடையின்றி, தங்குவதற்கு தகுந்த இருப்பிடம் இன்றி வாடும் போது, நாம் திருப்தியாக உண்டு, நன்றாக உடுத்தி, வசதியாக வீட்டில் இருந்து, நம்முடைய எதிர்காலத்திற்கு தேவையானதையும் சேர்த்து வைப்பது சரியாகுமா என்பதை சிந்தித்துப் பாருங்கள். 'அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதை யிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.' நானும் என் வீட்டாரும் பெருகினால் போதும் என்ற மனநிலையை விட்டுவிட்டு, உங்களிடம் இருப்பதில் பகிர்ந்து கொடுப்பதைக் குறித்த எண்ணமுள்ளவர்களாயிருங்கள். அரசனுக்கு வரியை கொடுக்காவிட்டால், தண்டப்பணம் செலுத்த வேண்டி வரும். பொது நல சேவைக்கு உதவி செய்யாவிட்டால், ஊர் ஒன்றுகூடலில் எப்படி மற்றவர்களுடைய முகத்தை பார்ப்பது என்ற பிரகாரம் அவனவன் விசனமாயும், கட்டாயமாயுமாய் வறியவர்களுக்கு உதவாமல், மனவிரு ப்பதோடும், உற்சாகத்தோடும் பகிர்ந்து கொடுங்கள்.

ஜெபம்:

மேலான அழைப்பை தந்த தேவனே, நான் விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும் மட்டும் பெருகி ன்றவனாக இல்லாமல், தானதர்மங்களிலும் விருத்தியடைய உணர்வைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 2:10