புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 23, 2023)

வறுமை மாறி வசதி உண்டாயிற்று

2 கொரிந்தியர் 9:9

வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த இரண்டு நண்பர்கள், தங்கள் சிறுவயதிலிருந்து மிகவும் கஷ்டங்கள் மத்தியிலே வளர்ந்து வந்தார்கள். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வந்த அவர்கள் இருவரும், தாங்கள் பொருளாதாரத்திலே விருத்தியடைய வேண்டும் என்று கடுமையாக பிரயாசப்பட்டு வந்தார்கள். ஆண்டுகள் கடந்து சென்றதும், அந்த பிரயா சத்தின் பலனாக, கைநிறைய உழை த்து வசதியுடையவர்களானார்கள். அவர்களிலே ஒருவன்: 'நான் கஷ் டப்படும் போது, ஊரிலே இருந்த ஒருவன் கூட, மனதிரங்கி எனக்கு ஒரு சரட்டை துண்டாகிலும் கொடுத்ததி ல்லை. எனவே, நான் இந்த ஊருக்கோ, ஊராருக்கோ, ஒரு சதம் கூட சும்மா கொடுக்க மாட்டேன்' என்று கடு மையாக கூறிக் கொண்டான். மற்றய நண்பனோ: 'நானும் கஷ்டப்படும் போது, ஊரிலே இருந்த ஒருவன் கூட, மனதிரங்கி எனக்கு ஒரு சதமும் கொடுத்ததை அறியேன். ஆனால், நான் அவர்களைப் போலல்லாது, இந்த ஊரிலே வறுமை கோட்டிற்குள் வாழும் பிள்ளைகள் வளம் பெறும்படிக்கான சில திட்டங்களை ஆரம்பிக்க உள்ளேன்.' என்று கூறிக் கொண்டான். பிரியமானவர்களே, இன்று சிலர், தேவன் என்னை ஆசீர்வதித்து, ஐசுவரியத்தை பெருகப் பண்ணினார் என்று கூறிக் கொள்கின்றார்கள். ஒருவேளை அது உண்மையாக இருந் தால், தேவனானவர் தாமே காரணம் இல்லாமல் காரியங்களை செய்வ தில்லை. எனவே, ஐசுவரியம் சம்பந்தமான வேத வார்த்தைகளையும், கர்த்தர் கூறிய உவமைகளையும் வாசித்து, தேவ நீதியை நீங்கள் நிறை வேற்றுங்கள். இருப்பவைகளை பயன்படுத்தி, பரலோகத்திலே உங்களு க்கு பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள். பழிக்கு பழி வாங்குவேன் என்ற பிரகாரமாக வாழ்ந்த அந்த முதலாவது நண்பனைப் போல, இறு மாப்படையாமல், சத்துரு பசியிhயிருந்தாலும், அவனுக்கு போஜனம் கொடு ப்பேன் என்ற மனதுடையவர்களாக வாழுங்கள். 'சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவன வன் விசனமாயு மல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரி யமாயிருக்கிறார். மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூ ரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிற வர் களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபை யையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.'

ஜெபம்:

திருப்பதியாக்கி நடத்தும் தேவனே, உம்முடைய ஈவுகளை நான் துஷ்பிரயோகம் செய்யாமல், மனப்பூர்வமாக பகிர்ந்து கொடுக்கும் இரக்கமுள்ள இருதயத்தை அடியேனுக்கு தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 12:33-34