புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 22, 2023)

சிறிதாக தொடங்கும் இச்சைகள்

1 தீமோத்தேயு 6:10

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;


குறித்த ஊரிலே வசித்து வந்த ஜனங்கள் மத்தியிலே, சிலர் மலைப் பாம்புகளையும் செல்லப் பிராணியாக வளர்ப்பது மக்கள் மத்தியிலே ஒரு பெருமைக்குரிய காரியமாக இருந்து வந்தது. அந்த மலைப் பாம் பானது வளர்ந்து அடைக்கப்பட்டிருக்கும் கூட்டைவிட்டு வெளியேற சந்த ர்ப்பம் கிடைத்த் முதல் நாளிலேயே, பாதகமான காரியங்கள் நடப் பித்ததை அந்த ஊரார் அறிந் திரு ந்தார்கள். இதனால், அந்த ஊரிலே வசித்து வந்த மருத்துவரானவர், இப்படியான மதியீனமான செயல் களை செய்ய வேண்டாம் என்று, ஊர் மக்களுக்கு கண்டிப்போடு அறிவுரை வழங்கி வந்தார். ஆண்டு கள் கடந்து சென்ற போது, அந்த மருத்துவரானவருடைய மனைவியான வள் தன் வீட்டிலே, கம்பிகளால் அடைக்கப்பட்ட கூடொன்றிலே ஒரு சிறிய மiலைப்பாம்பை வளர்ப் பதை, அந்த ஊரிலே சிலர் கண்டு கொண்டார்கள். அந்த ஊரின் மூப் பர்களிலொருவர், அந்த மருத்துவரை அணுகி, ஐயா, பாம்புகளை செல்லப் பிராணியாக வளர்க்க வேண்டாம் என்று ஊர் மக்களுக்கு எச்சரிப்பை வழங்கி நீங்கள், முன் உதாரணமாக இருக்க வேண்டாமா? என்று தயவாக கேட்டுக் கொண்டார். அதற்கு அந்த மருத்துவரானவர் மறுமொழியாக, நான் ஒரு மருத்துவர், மருத் துவ பரிசோதனைக்காக அதை வளர்க்கின்றேன். அது ஒர சிறிய பாம்பு தான் என்றார். அதற்கு அந்த மூப்பரானவர்: ஐயா, சிறிய பாம்புதான் வளர்ந்து பெரிதாகுமே என்று நீங்கள் அறிவுரை கூறவில்லையா என்று கேட்டார். அதற்கு மருத்துவரானவர்: நீங்கள் என்னையும்; ஊர் மக்களை யும் ஒரு மட்டத்தில் வைத்து பேசுகின்றீர்களா? அதை கட்டுப்படுத்தி, ஒழு ங்காக பராமரித்துக் கொள்வது எப்படி என்பதை நான் நன்றாக அறிந்தி ருக்கிறேன் அதனால், அதைக் குறித்து கவலையடைய வேண் டாம் என்று முடிவாக கூறி அவரை அனுப்பிட்டார். பிரியமானவர்களே, இன் றைய நாட்களிலே, தங்களை தேவனுடைய ஊழியர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலரும், அந்த மருத்துவரரைப் போல, பணஆசையைக் குறி த்து ஊருக்கு உபதேசம் கூறிகின்றார்கள். ஆனால், தாங்கள் அதைப் பற்றிக் கொண்டு, அதனால் தங்களுக்கு வேதனை உண்டாகாது என்று கூறிக் கொண்டு, தங்கள் நிலைமையை நியாயப்படுத்துகின்றார்கள். இப் படியான செயல்களை கண்டு, நீங்கள் நிலை தவறிப் போகாதபடிக்கு, கர்த்தருடைய உபதேசத்திலே உறுதியாய் நிலைத்திருங்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேர். அந்த இச்சை சிறிதான மலைப் பாம் பைப் போல ஆரம்பித்து, பெரிதாக வளர்ந்து, விசுவாசக் கண்களை குரு டாக்கி, வாழ் விலே அநேக வேதனைகளை உண்டாக்கி விடும்.

ஜெபம்:

பரலோக மேன்மைகாக என்னை அழைத்த தேவனே, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடவும், போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியுடையவனாகவும் வாழ எனக்கு உணர்வுள்ள இருதய த்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 19:24