தியானம் (கார்த்திகை 21, 2023)
உலக ஐசுவரியத்தை நாடுகின்றவர்கள் யார்?
சங்கீதம் 49:10
ஞானிகளும் மரித்து, அஞ் ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.
இந்த உலகத்தின் ஐசுவரியம் மனிதனுக்கு இரட்சிப்பை கொடுப்பதில்லை என்பதை விசுவாசக் குடும்பத்தார் யாவரும் நன்றாகவே அறிந்தி ருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல், இவைகளை தேவனை அறியாத வர்கள் நாடித் தேடுகின்றார்கள் என்று மற்றவர்களுக்கும் ஆலோசனை யும் கூறுகின்றார்கள். ஆனால், இன்றைய உலகிலே, தேவனை அறிந்த வர்கள் என்று கூறும் சிலர், உலக ஐசுவரியம் தேவனுடைய ஆசீர்வாதம் என்று நம்பி, அதை நாடித் தேடுகின்றார்கள். தங்களிடத்திலே அழிந்து போகும் ஐசுவரியம் பெருகினால், அது தேவனுடைய ஆசீர்வாதம் என் றும், தேவனை அறியாதவர்கள், இந்த உலகத்தின் வழியிலே கடுமையாக உழைத்து, ஐசுவரியத்தை பெருக்கி னால் அதை சாபம் என்றும் கருதுகின்றார்கள். ஒரு சமயம் ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். பிரியமானவர்களே, தேவனுடைய வார்த்தை களை அற்பமாக எண்ணி அசட்டை செய்யாதிருங்கள். 'தங்கள் செல்வ த்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற, ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே. அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அரிதாயிருக்கின்றது. அது ஒருபோதும் முடியாது. ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூ டரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப் போகிறதைக் காண்கிறான். தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங் கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள். ஆகிலும் கனம்பொருந்தியவ னாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை. அழிந்துபோகும் மிருக ங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.' (சங்கீதம் 49:6-12) என்று பரிசுத்த வேதா கமம் கூறுகின்றது. வானமும் பூமியும் அதிலுள்ள யாவும் அழிந்து போகும். உங்கள் ஆத்துமாவும் அவைகளோடு அழிவை சுதந்திரித்துக் கொள்ளாதபடிக்கு, பரலோகத்தின் மேன்மையானவைகளை பற்றிக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
பரலோக மேன்மைகளை தேடுங்கள் என்று கூறிய தேவனே, அழிந்து போகின்ற உலக பொக்கிஷங்கனை நாடித் தேடாமல், பரலோகத் திலே எனக்கு பொக்கிஷத்தை சேர்த்து வைக்க வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - லூக்கா 12:15-21